இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் Tucson, Arizona, USA 63-0604 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி ஐயா. இந்த இரவின் பொழுது இங்கே இருப்பது அருமையாயிருக்கிறது. இந்த நேரத்துக்காக நான் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தேன். ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்து, சரியாக கிறிஸ்துமஸ்க்கு பிறகு, உங்களுடைய அருமையான பட்டணத்தில் தங்கி வருகிறோம். ஒரு நாள் சகோதரன் டோனி ஸ்ட்ரோமியோடு நான் போய் கொண்டிருக்கையில், நாம் இந்த இடத்தைவிட்டு கடந்து செல்வதற்கு முன்பாக ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்வது அருமையாயிருக்கும் என்ற எண்ணம் உண்டானது. அதன் பிறகு சிறு கூட்டங்களை இங்கு வைத்து நாம் அனைவரும் தேவனுடைய வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொண்டால் நலமாய் இருக்கும் என்று எண்ணினோம். 2மற்றும் நான்... இங்கு நான் அநேக சகோதரர்களை சந்தித்திருக்கிறேன். அதில் சிலருடைய சபைக்குச் சென்றபோது அவர்கள் எனக்கு அருமையான வரவேற்பு கொடுத்ததைக் கண்டேன். இப்பொழுது சில இரவுகள் நாம் எல்லோரும் இங்கு ஒன்றாய் கூடி தேவனுடைய வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொள்ளும்படி வந்திருப்பது அருமையான காரியமாய் இருக்கிறது என்று எண்ணுகிறேன். இது தேவனுடைய மகிமைக்கு மகத்தான வெற்றியாக இருக்கும் என்று நம்புகிறோம். மற்றும் இயேசு எதற்காக மரித்தாரோ; அதாவது அவர் திரும்ப வரும்போது ஒரு கறை திரையற்ற சபையை அவருக்காகக் கட்டி எழுப்பும் என்றும் நம்புகிறோம். நாம் இப்பொழுது, எந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்தையும் பிரதிநிதிப்படுத்தவில்லை. எந்த சபை பாகுபாடுமின்றி கிறிஸ்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்று கூடி இந்த ஐக்கியத்தில் பங்கு கொள்ளும்படி வந்திருக்கிறோம். 3மற்றும் நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். அநேக முறை வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம் என்று சொல்லும்போது மக்கள் அப்படியாக “அவர் தெய்வீக சுகமளிக்கிறவர்” என்று சொல்லுவார்கள். அப்படி இல்லை‚ கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் அப்படி இல்லை என்று நம்புகிறேன். நாம்... சில நேரங்களில் நீங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதினால் உங்களை தெய்வீக சுகம் அளிக்கிறவர் என்று அழைப்பார்கள். இழக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கும் போது எப்படி உங்களை ஒரு தெய்வீக இரட்சகராக ஆக்க முடியாதோ; அதேபோல், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் போது உங்களை ஒருதெய்வீக சுகமளிக்கிறவராக ஆக்க முடியாது என்று நம்புகிறேன். ஆகவே, நாம் ஒரு தெய்வீக இரட்சகராகவோ அல்லது ஒரு தெய்வீக சுகமளிக்கிறவராகவோ இருக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறோம். 4இன்று கிறிஸ்தவத்துக்குள் நாம் அனுபவிக்கிற எல்லா மகத்தான நன்மைகளும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து கல்வாரியில் சம்பாதித்ததின் மூலம் பெற்றிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம்; காயப்பட்டு; நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டு; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்றும்; அவருடைய தழும்புகளால் குணமானோம்“, என்றும் நாம் விசுவாசிக்கிறோம். இவை எல்லாமுமே கடந்த காலமாகும். எல்லாவற்றையும் தேவன் நமக்காக கல்வாரியில் செய்து முடித்தார். மற்றும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு அவர் சம்பாதித்த இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு. 5ஆகவே எந்த ஒரு மனிதனும் மற்றொருவரை இரட்சிக்க முடியாது. அப்படி இருக்குமானால் இயேசு மரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு கல்வாரியில் மரித்த போது பாவத்திற்கான கேள்வியை என்றென்றைக்குமாய் நீக்கிப் போட்டார். அவர் மரித்த அந்த நிமிடமே ஒவ்வொரு மனிதனும், பூமியின் மேலுள்ள ஒவ்வொரு சிருஷ்டிப்பும், இரட்சிக்கப்பட்டது. முற்றிலுமாக கிரயமானது செலுத்தப்பட்டாயிற்று. அதை முற்றிலுமாகச் சந்தித்தது. அது உண்மை என்று தேவன் அடையாளங்கண்டு கொண்டார். இப்பொழுது, அதைப் பெற்றுக் கொள்ள அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிப்பதே நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம். அவர் எவ்வளவுதான் நம்முடைய இரட்சிப்புக்காக மரித்திருந்தாலும் நம்முடைய சொந்த தனிப்பட்ட அனுபவமாக அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். அது நம்முடைய சொந்த வாஞ்சையாக இருக்க வேண்டும். நாம் இரட்சிக்கப்பட விரும்பவேண்டும். அதன் பின் அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் வேதம் கோரின எல்லாவற்றையும் நிறைவேற்றின பிறகே நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று விசுவாசிக்க வேண்டும். 6வேதமானது இயேசு கிறிஸ்துவினுடைய முழு வெளிப்பாடாய் இருக்கிறதென்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது தேவன் வேதத்தில் எழுதப்படாதவைகளையும் செய்ய முடியும் என விசுவாசிக்கிறேன், ஏன்னென்றால் அவர் தேவன். ஆனால் நாம் அவைகளை வேதத்தில் வாக்குத்தத்தங்களாகக் காணும் போது அதுஉண்மை என்று அறிகிறோம். ஏனெனில் வார்த்தை எப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. ஆகவே அவர் அவருடைய வாக்குத்தத்தங்களை காத்துக் கொள்வார் என்று விசுவாசிக்கிறோம். அவர் சர்வவல்லமையுள்ளவரும் மற்றும் முடிவில்லதவர் என்றும் விசுவாசிக்கிறேன். அவர் முடிவில்லாதவராய் இருக்கிறதினாலே அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார். இலட்சோப லட்ச வருடங்களுக்கு முன்பாக, உலகம் தோன்றுவதற்கு முன்பாக, நாம் சரியாக இன்றிரவு இங்கே இருப்போம் என்று அவர் அறிந்திருந்தார். அப்படி இல்லையென்றால் அவர் முடிவில்லாதவர் அல்ல. அவர் முடிவில்லாதவராய் இல்லாத பட்சத்தில் அவர் தேவனாக இருக்கமுடியாது. ஆகவே இந்த வார்த்தை, இந்த வேதாகமம், இது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறதென்று விசுவாசிக்கிறோம். இதிலே உங்கள் ஆத்துமாவை எப்பக்கத்திலும் இளைப்பாறச் செய்யலாம். அந்த ஒரு வழியில் மாத்திரம் தான் நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும். அதை நீங்கள்... விசுவாசமானது ஏதாவதொன்றின் மேலாக நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். நங்கூரமிடப்படுவதற்கு தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் எதுவும் திடமாய் இருக்கமுடியாது. ஏனென்றால் வார்த்தை தேவனாய் இருக்கிறது. அதைத்தான் வேதம் போதிக்கிறது. ஆகவே, தேவன் ஏதாவதொன்றைச் சொல்லுவாரானால் அதற்கு ஒரு விசுவாசி அவர் சொல்லுகிற எல்லாவற்றிற்கும் “ஆமென்” என்று சொல்லமுடியும். 7அவர் முடிவில்லாதவரும், சர்வ வல்லவரும், சர்வ வியாபியுமாக இருக்கின்றபடியால், இவைகளில் ஒன்று இல்லாமல் மற்றொன்றை மாத்திரம் கொண்டிருக்க முடியாது. தேவனாய் இருப்பதற்கு அவர் எல்லாமுமாக இருக்க வேண்டும். ஜீவனின் முடிவையுடைய நம்மைப் போன்றவர்கள் தான் இந்த வருடம் ஒரு காரியத்தைச் செய்து அது பூரணமாய் இருக்கிறது என்று எண்ணிக் கொள்வோம். அடுத்த வருடத்திலோ அல்லது, ஒரு வேளை மறுநாளிலேயே அந்த சிந்தையை மாற்றவேண்டியதாய் இருக்கலாம். காரியங்கள் மாறுகிறது. நாம் முடிவுள்ளவர்களாய் இருக்கிறதினாலே அதைக் காட்டிலும் இன்னும் சிறந்ததொன்றைக் கண்டடைகிறோம். அவர் முடிவில்லாதவர். ஆகவே அவர் ஒரு வார்த்தை சொல்லுவாரானால் அது என்றென்றைக்கும் அந்த விதமாகவே இருக்கும். அதை ஒரு போதும் மேம்படுத்த இயலாது. அது ஒரு போதும் திரும்ப எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஏதாவது ஒரு முறை காட்சியில் தேவன் அழைக்கப்பட்டு கிரியை செய்திருப்பாரென்றால், அவர் அழைக்கப்படும்போதெல்லாம் அதே விதமாக என்றென்றும் கிரியை செய்தாக வேண்டும். அவர் முதன் முறையாக செய்ததிலிருந்து மாறுபடுவாரானால் அதில் ஏதோ தவறு இருக்கும். பாருங்கள்? அது பரிபூரணமாய் இருக்கமுடியாது. பாருங்கள்? ஆகவே அவர் முதல் முறை செய்ததிலிருந்து இரண்டாம் முறை செய்வதில் வித்தியாசம் இருக்கும் என்றால், அவர் தவறாய் செயல்பட்டிருக்கிறார். 8ஆகவே தான் அவர் ஏதேன் தோட்டத்தில் மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு ஒரு பரிகாரத்தைச் செய்தபோது, ஆறாயிரம் வருடங்களாக மக்கள் அந்தப் பரிகாரத்தை மேம்படுத்த முயற்சித்தும் அதை ஒருபோதும் நெருங்க முடியவில்லை. அவர் அதை குற்றமற்றவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் அதை செய்தார். ஒரு போதும் அதை மாற்றவில்லை. நாமோ மக்களை கல்வியின் மூலம் கிறிஸ்துவன்டைக்கு நடத்தும்படி போதிக்க முயற்சித்தோம், ஸ்தாபனத்தின் மூலம் அவர்களை கிறிஸ்துவன்டையில் வழிநடத்த முயற்சித்தோம். மற்றும் எல்லா விதமான அமைப்புகளின் மூலம் செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமுமே தோல்வியடைந்தது. மனிதன் எந்தப் பாகுபாடுமின்றி ஒன்றாய்க் கூடி தேவனை ஆராதிப்பதற்கு ஒரு இடம் மாத்திரமே உண்டு. அது சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழாக மாத்திரமே. ஆதியில் இருந்தே அது அந்த விதமாகவே இருக்கிறது. அவர் அதை மாற்ற முடியாது. அது எப்பொழுதும் இரத்தத்தின் மூலமாகத்தான் இருக்கிறது. அது இரத்தமாகத்தான் இருக்கிறது. 9இன்று நாம் ஒருவனைக் காட்டிலும் நான் சற்று வித்தியமானவன் என்று சொல்லுவோமானால் அது நமக்கு கிரியை செய்யாது. அந்த சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் இன்னுமாக நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே ஒரு மனிதனுக்கு சுகம் கொடுக்கும்படியாக தேவன் காட்சியிலே அழைக்கப்படும்பொழுது, அவர் அவனுடைய விசுவாசத்தின் அடிப்படையில் சுகத்தைக் கொடுப்பாரானால் அவர் மறுபடியுமாக காட்சியிலே அழைக்கப்படும் போது, அடுத்த மனிதனுக்கும் அதே விதமாக சுகத்தைக் கொடுப்பார். இல்லையென்றால் அவர் தவறாய் கிரியை செய்பவராவார். ஒரு மனிதனுடைய விசுவாசத்தின் நிமித்தம், தேவன் அவனை சுகப்படுத்துவாரானால், அதன் பின்பு அடுத்த மனிதன் அதே விதமான விசுவாசத்தோடு அழைக்கும்பொழுது, தேவன் அந்த மனிதனுக்கும் அதே காரியத்தை செய்ய கடமைப்பட்டவராய் இருக்கிறார். அப்படியில்லை என்றால் அவர் பட்சபாதமுள்ளவராகவும், முதலிலே தவறு செய்தவராகவும் இருப்பார். ஆகவே வார்த்தைக்கு திரும்புங்கள். நான் என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன். 10இப்பொழுது தேவன் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்யும்படி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் நாங்கள் இங்கிருந்து கடந்து போகும்போது, இந்தப் பட்டணம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதைக் காண விரும்புகிறோம். மற்றும் நீங்களும் எனக்கு ஆசீர்வாதமாய் இருப்பீர்கள் என்று அறிவேன். ஏனென்றால் அவருடைய நாமத்தில் எங்கெல்லாம் இரண்டு மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ அங்கே நான் இருப்பேன் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இப்பொழுது, அந்தபடி அவர் இல்லை என்றால் நாம் எல்லோரும் இழக்கப்பட்டவர்களாயும், வேதம் தவறானதாயும் இருக்கும். அது தான் இயேசு கிறிஸ்துவை இங்கு இருக்கும்படி செய்கிறது. அப்படி இல்லையென்றால், பிறகு நாம் என்ன பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம், என்ன விசுவாசித்துக் கொண்டிருக்கிறோம்? பாருங்கள்? அவர் இங்கு இருக்கிறார், “எங்கே என் நாமத்தினால் இரண்டு மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன்”. இப்போது, நாம் அப்படியாகவே நடக்கவேண்டும், அவ்விதமாகவே விசுவாசிக்க வேண்டும். அவர் இங்கிருக்கிறார் என்று விசுவாசித்து, அவர் இங்கிருப்பதைப் போலவே நாம் நடக்க வேண்டும். நாம் இங்கிருந்து கடந்து போன பிறகும் அவர் நம்மை கவனிக்கிறார் என்று நினைவில் கொள்ளுங்கள். 11மற்றும் இந்த கூட்டங்களிலே இரட்சிப்பைப் பெறாத ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். இந்த நேரம் கொண்டு, தங்களுடைய சபையை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கிற ஒவ்வொருவருடைய சபையிலும் காலி இருக்கைகள் இருக்காது என்று நம்புகிறோம். மற்றும் இங்கே டூசானில் தேவனால் அனுப்பப்பட்ட அந்த பண்டையகால எழுப்புதல் உண்டாகி ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை தேவனுடைய இராஜ்யத்திற்குள் அனுப்பும் என்று நம்புகிறேன். அதுவே தேவனுடைய சித்தமாக இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த இரவின் பொழுதில் அதுவே அவருடைய வாஞ்சையாயிருக்கிறது. எந்த ஒரு தனிப்பட்ட நபராலும் அதை தன்னிச்சையாகச் செய்யமுடியாது. இது எல்லோரும் சேர்ந்து ஆவியிலே ஒன்றாகி, ஒற்றுமையாய் நின்று, சேர்ந்து இழுத்து, இணைந்து ஜெபித்தால் தான் பெறமுடியும். இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இந்த கூட்டத்திற்கு முன்னதாக சபைகளில் ஜெபக் கூட்டங்கள் நடந்தது என்று சகோதரர்கள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இது... இவ்விதமாக நீங்கள் ஒன்றாகக் கூடி இணைந்து ஜெபிக்கும்போது, அதாவது நாம் ஒன்றாய் கூடி ஜெபிக்கும்போது முழு சூழ்நிலையையும் மாற்றும். 12இப்பொழுது, ஒவ்வொரு சாயங்கால கூட்டத்திலும் உங்களை அதிக நேரம் காக்க வைக்கமாட்டோம். ஏனெனில் நீங்கள் சென்று, பிறகு உங்களுடைய வேலைக்குச் செல்ல வேண்டியதாயிருக்கிறது என்று நான் அறிவேன். ஆகவே நீங்கள் மறுபடியும் அடுத்த இரவு கூடி வருவதற்கு ஏற்ப உங்களை சீக்கிரமாய் கடந்து செல்லும்படி நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த கூடுகையானது ஒரு சிறிய சந்திப்பாக இருக்கிறது. நமக்குச் சரியாக நான்கு நாட்கள் மாத்திரம் உள்ளது என்று நினைக்கிறேன். அது சரிதான். புதன், வியாழன், வெள்ளி. சரி நான்கு நாட்கள்... அதன் பிறகு சரியாக சனிக்கிழமை காலை அன்று இதே அரங்கத்தில் வியாபார நபர்களின் காலை உணவோடு கூட்டம் நிறைவுபெறும். பொது மக்களும் அதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது, நான் ஒரு அந்நியன் அல்ல. உங்கள் மத்தியிலே நான் ஒரு அந்நியனாக உணரவில்லை. நான் உங்களுடைய சகோதரன். அதே விதமாக நீங்களும் என்னைக் குறித்து உணருகிறீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பாக வார்த்தையின் ஆக்கியோனை அணுகுவோம். ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 13சர்வ வல்லமையுள்ள தேவனே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி இவ்வளவு காலமாக அவரை ஜீவிக்கும்படி வைத்த எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே... அவர் சதாகாலங்களிலும் ஜீவிக்கிறவராய், இன்றிரவு எங்களுடைய இருதயத்தில் ஆளுகை செய்து, எங்களை வழி நடத்தும்படி கட்டுப்பாட்டை தாம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவர் எங்களுக்காக வைத்திருக்கிற வழியிலே நடத்தப்படும்படி எங்கள் எல்லோரையும் அவருடைய தெய்வீக சித்தத்திற்கு ஒப்பு கொடுக்கப்பட்டிருப்போமாக. பிதாவே, இயேசு கிறிஸ்துவை மகத்தான சுகமளிக்கிறவர் என்றும் அவர் மானிடனின் இரட்சகர் என்றும், ஏங்குகிற இருதயங்களுக்குத் திருப்தியைத் தருகிறவர் என்றும், வியாதியஸ்தர்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறவர் என்றும், இழக்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறவர் என்றும், வரப்போகிற பரிசுத்தவான்களின் ராஜாவாகவும் இருக்கிறார் என்றும் அவரைக் குறித்துப் பேசும்படி எங்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் தருணத்திற்காக நன்றி செலுத்துகிறோம். ஓ, கர்த்தாவே இன்று இரவு எங்கள் எல்லோரையும் ஊக்குவியும். 14இந்த பட்டணத்தின் மேய்ப்பர்களுக்காக நான் நன்றி செலுத்துகிறேன். இந்த ஊழியக்கார சகோதரர்கள் இந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் ஊழியம் செய்து, பரிசுத்த ஆவியின் அசைவானது அவர்கள் மத்தியில் வந்து தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படியாய் அவர்களுடைய ஆடுகளை வழிநடத்த வேண்டும் என்று சொல்லும்படி தொடர்ந்து தேவ ஆவியின் அசைவாட்டுதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவரே, பார்ப்பதற்கு இந்த இரவுப் பொழுதில் இந்தச் செய்தியானது அந்த அசைவினூடாகக் கடந்து சென்றது போல் இருக்கிறது. இப்பொழுது அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு இந்த ஆராதனைக்கு ஒன்றாய் கூடி வந்திருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவே நீர் வாரும். இங்கே சுவிசேஷத்திற்கு இந்த இடத்தை திறந்து கொடுத்த மற்றும் இந்த குளிர்சாதன கட்டிடத்தில் கூடி ஆராதிக்கும் படியாகத் திறந்து கொடுத்த “ரமதா விடுதிக்காக” நன்றி செலுத்துகிறோம். பிதாவாகிய தேவனே இந்த கட்டிடத்தை விட்டு கடந்து செல்லும் போது இழக்கப்பட்ட நிலையில் இருக்கிற எந்த ஒரு நபரும் இரட்சிக்கப்படாமல் போகவேண்டாம் என்று ஜெபிக்கிறோம். அதை அருளும் ஆண்டவரே. இந்த ரமதா விடுதியில் வேலை செய்கிறதான அலுவலர்கள் இரட்சிக்கப்படாமல் இருப்பார்கள் என்றால் அவர்களை இரட்சிக்கும்படி ஜெபிக்கிறோம். 15இங்கே இருக்கிறதான வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே மக்கள் இந்த அரங்கத்தைச் சுற்றி அழுது கொண்டு இருக்கும்படி செய்யும். இதை அருளும் ஆண்டவரே. இப்படிப்பட்ட காரியங்களுக்காக நாங்கள் ஏங்குகிறோம். மற்றும் உம்முடைய பிரசன்னத்தை நீர் காண்பித்து இங்கே இருக்கிறீர் என்றும், எப்பொழுதும் ஜீவிக்கிறீர் என்றும், என்றென்றும் எங்களோடு இருக்கிறீர் என்றும் எங்களுக்கு வெளிப்படுத்துவது உம்முடைய தெய்வீக சித்தமாய் இருக்கிறது என்று விசுவாசிக்கிறோம். எங்களுடைய இந்த எளிமையான முயற்சியை ஆசீர்வதிப்பீராக. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்குள்ளாக வருவாராக. எங்களுடைய சொந்த சிந்தனையை சிந்தித்துக் கொண்டிருக்காமல் “கிறிஸ்துவின் சிந்தை உங்களிலும் இருக்ககடவது” என்ற வேத வசனம் நிறைவேற, உம்முடைய பிரசன்னத்திலே எங்களை அபிஷேகம் பண்ணும்படியாக எங்களுடைய சிந்தையை திறந்து கொடுப்போமாக. எங்கள் பிதாவே, எங்களை ஆசீர்வதியும். நாங்கள் இந்த ஆராதனையை விட்டுக் கடந்து செல்லும் போது உயிர்தெழுதலின் முதல் சாட்சியாகிய கிளியோபாசும், அவனுடைய நண்பரும் பட்டணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில் “அவர் நம்மோடு வழியருகே பேசிக்கொண்டு போகையில் நம்முடைய இருதயம் கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று ஒரு நாளில் சொன்னது போல நாங்களும் சொல்வோமாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 16பொதுவாக சுவிசேஷகர்கள் வாசிக்கிறதான வேத வசனங்களையே அநேகர் எடுப்பார்கள். இந்த இரவின் பொழுதில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைக் காணும்படி, என்னுடைய எளிமையான முறையில் சில வேத வசனங்களை உங்களுக்கு விளக்க முயற்சிக்க விரும்புகிறேன். இப்பொழுது என்னோடு வாசிக்க விரும்புவீர்கள் என்றால், பரிசுத்த யோவான் 12-ம் அதிகாரம் 20-ம் வசனத்திற்கு திருப்புங்கள். பரிசுத்த யோவான். 12:20 மற்றும் 'பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில்“ சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று அவனைக் கேட்டுக் கொண்டார்கள். அடுத்து எபிரேயர் 13-ம் அதிகாரம் 8-ம்வசனம். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற பொருளை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 17ஞாயிற்றுக் கிழமை இரவன்று இந்த பட்டணத்திலுள்ள உங்கள் அருமையான சபைகளில் ஒன்றான ஒரு சபையின் ஆராதனையில் கலந்து கொண்டேன். நான் இந்தப் பட்டணத்திற்கு வந்தது முதல் என்னால் முடிந்தவரை அநேக இடத்துக்கு செல்ல முயற்சித்தேன். அதில் ''அசெம்பிலீஸ் ஆப் காட்“, ''பாப்டிஸ்டு”, ''ஆண்டர்சன் சர்ச் ஆப் காட்“, இன்னும் நான் விஜயம் செய்த அநேக சபைகள் அருமையான ஐக்கியத்தைக் கொண்டிருந்ததையும் எனக்கு அருமையான வரவேற்பைக் கொடுத்ததையும் கண்டேன். இந்த சபையிலே அவர்களுடைய பீடத்துக்கு பின்னாக “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்ற வேதாகம வசனம் எழுதப்பட்டிருந்தது. அதுவே என்னுடைய எல்லா கூட்டங்களிலும் மையப் பொருளாய் இருந்தது. ஏன் அதை உபயோகப்படுத்தினேன் என்றால்; முழு வேதாகமமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிபாடாய் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். மற்றும் அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதன் பிறகு... 18என்னுடைய பொருளை “ஐயா நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்” என்பதின் மேலாகக் கட்ட விரும்புகிறேன். இந்த இரவின் பொழுது அந்த கிரேக்கர்கள நம் எல்லாருடைய உணர்வுகளையும் வெளிப் படுத்தினார்கள் என்று ஒவ்வொரு புருஷனும் ஸ்திரியும் தாராளமாய் உணருவீர்கள் என்று விசுவாசிக்கிறேன். ஏன்னென்றால் அவர்கள் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டார்கள். ஆனால் இப்பொழுதோ அவரைக் காண விரும்பினார்கள். இயேசு கிறிஸ்துவினுடைய அருமையான கதையைக் கேட்ட பின்பு அவரைக் காணும்படியான ஏக்கம் இருதயத்தில் இல்லாத மனிதன் யாரும் இருக்க முடியாது என்று விசுவாசிக்கிறேன். அது தான்... அவரைக் காண வேண்டும் என்பதே ஒரு விசுவாசியின் வாஞ்சையாய் இருக்கிறது. அவர் குட்டையாய் இருந்தாலும் சரி, உயரமாய் இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி, அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை, நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரைக் காண விரும்புகிறேன். மற்றும் என்னை இரட்சித்து எனக்காக எல்லாவற்றையும் செய்த அந்த ஒருவரைக் காண ஏங்குகிறேன். 19இப்பொழுது, கிரேக்கர்கள் யூத மதத்தைச் சார்ந்த பிற இனத்தார் (proselytes) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்டைப் பலி செலுத்துகிறதான பஸ்கா பண்டிகையாய் இருந்ததினால் அங்கே கிரேக்கர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் மேன்மையான திறமைகள் உள்ள மக்கள். அவர்கள் உலகத்தை கலையம்சங்களில் நடத்தியவர்கள். அவர்கள் விஞ்ஞானத்தில் அதிக தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் மகத்தானவர்கள் அவர்கள் மேதாவிகள். அதிகமான புத்தகங்களை படித்தவர்கள். மனித இருதயத்தில் இருக்கும் தங்களுடைய தாகத்தை தீர்க்கிற அந்த ஒரு காரியத்தைக் கண்டுபிடிக்கும்படி ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கச் செய்கிற காரியமானது இவர்களையும் பிடித்திருந்தது. 20மனிதன் ஏன் தவறு செய்கிறான் என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ஏனென்றால் அவன் தன்னுடைய இருதயத்தில் தேவனால் வைக்கப்பட்ட தேவனுக்கு அடுத்த தாகத்தை தீர்க்கும்படி ஏதாவது ஒரு காரியத்தைக் கொண்டு திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். அதன் பிறகு அவன் உலகக் காரியங்களைக் கொண்டு திருப்தியடைய முயற்சிக்கிறான். ஆனால் அது ஒரு போதும் அவனை திருப்திப்படுத்தாது. தேவன் தாமே வந்து மனிதனுக்குள்ளாக இருக்கும் அந்த ஏக்கத்தையும் தாகத்தையும் திருப்தியளிக்கு மட்டும் எதுவும் அவனைத் திருப்திபடுத்தாது. அவனை திருப்திப்படுத்த எதினாலும் கூடாததாய் இருக்கிறது. மனிதனுடைய இருதயத்திற்குள் தேவன் அவருடைய ஸ்தானத்தைச் சரியாய் எடுக்கும் வரைக்கும் வேறு எதுவும் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 21கிரேக்கர்கள் வரப்போகிற மேசியாவைக் குறித்தும் அவர் வரும்போது எப்படி இருப்பார் என்று பழைய ஏற்பாட்டில் படித்தும், கேள்விப்பட்டும் இருப்பதில் எந்த சந்தேகமுமில்லை. தேவன் மாமிசத்தில் வெளிப்படும் போது எப்படி இருப்பார் என்றும், தேவத்துவம் முழுமையாய் அவருக்குள் இருக்கும்போது, எந்த விதமான மனிதனாய் காணப்படுவார்? என்றும் ''அவர் எப்படி இருப்பார்?“ என்றும் பார்க்க ஆவல் கொண்டார்கள். மேசியா என்று உரிமை கோருகிற இந்த நபராகிய இயேசுவைக் குறித்தும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். 22யூதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாய், தேவன் தாமே தன்னுடைய குமாரனுடைய சாயலில் மனிதனாகி இரத்தம் சிந்தி மரிக்கும்படிக்கு வருகிற அந்த ஒருவருக்காக எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள். காரணம் என்னவென்றால் எந்த ஒரு மனிதனும் இன்னொருவனுடைய பாவத்துக்காக மரிக்க முடியவில்லை. ஏனென்றால் நாம் எல்லோரும் குற்றவாளியாய் இருக்கிறோம். ஒரு மனிதன் இன்னொருவனை இரட்சிக்க முடியாது. அதற்கு பாத்திரமான ஒரு ''மனிதன்“ இருந்தாக வேண்டும். அவர் ''இனத்தான் மீட்பராக” வர வேண்டும் என்று பழைய பிரமாணம் சொல்லுகிறதை ஊழியக்காரர்கள் நன்கு அறிவார்கள். தேவன் நமக்காக இனத்தானாக ரூபம் எடுக்க வேண்டியதாயிற்று. ஆகவேதான் அவர் தன்னுடைய கூடாரத்தை மாற்றிக் கொண்டார். தேவனாகிய அந்த மகத்தான யெகோவா தன்னை வெளிப்படுத்தும் படியாக மாம்சமாகி தன்னுடைய குமாரன் என்கிற ரூபத்தை எடுத்துக் கொண்டார். அவருடைய சொந்த சிருஷ்டிப்புகளையெல்லாம் மீட்கும்படியாகவும், நம்முடைய பாவத்தை விலக்கும்படியாகவும், இனத்தானாய் வந்து மரிப்பதற்கு அவர் ஒருவரே பாத்திரர். ஓ‚ இந்தக் கதை மிக மகத்தானது‚ அந்த உண்மையை அறிவதற்கோ அதை விவரித்துச் சொல்லுவதற்கோ எந்த அணுகுமுறையும் கிடையாது. அதை விவரித்து... தன் சொந்த சிருஷ்டிப்புகளை இரட்சிப்பதற்காக, சிருஷ்டி கர்த்தர் இறங்கி வந்தார். அந்த அன்பை விவரித்துச் சொல்ல மனித மொழிகளால் கூடாது. 23இப்பொழுது, இந்த கிரேக்கர்கள் தாகமாய் இருந்ததைக் காண்கிறோம். ''விசுவாசம் கேள்வியினாலே வரும், வார்த்தையைக் கேட்கிறதினால் வரும்“, வேதத்தில் எபிரெயரிலே, ”விசுவாசம் கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையை கேட்கிறதினால் வரும்“ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஒரு மேசியா இருக்கவேண்டும் என்பதை கேள்விப்பட்டதினாலே அவர்கள் அவரைக் காணும்படி வந்தார்கள். மக்கள் மத்தியிலே மேசியா என்று விசுவாசிக்கப்பட்டதான அந்த நபரை; அவர் தான் அந்த மேசியா; அவரைப் பார்க்கும் படியாக வந்தார்கள். இப்பொழுது, நாமும் கூட அதே நிலையில்தான் இருக்கிறோம். நாம் தேவனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அவரைக் குறித்து போதிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வளவு காலமாக நாம் பெரிய சபைகளையும், பெரிய மனிதர்களையும், பெரிய சுவிசேஷகர்களையும் கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுதோ நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் நிழலிலே ஜீவிக்கிறோம் என்று விசுவாசிக்கிறேன். இந்த சபையானது லூத்தரின் நீதிமானக்கப்படுதலில் இருந்தும், வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதலில் இருந்தும், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்திற்குள்ளாகக் கடந்து வந்து, ஒரு கறை திரை அற்ற பரிபூரணமான சபையாக மாறிக்கொண்டு வருகிறது. இப்பொழுது அந்த சபையின் மூலமாகத்தான், இதுவரைக்கும் காலங்களினூடாக இரத்தத்தினால் கழுவப்பட்ட எல்லா பரிசுத்தவான்களையும் மீட்டு அவர்களை வீட்டுக்குக் கொண்டு செல்வார். நாம்... நாம் எப்பொழுதும் இருக்கிறதைப் போல் ஒரு சிறு கூட்டத்தாராக கிறிஸ்துவைப் போல் மாறிக் கொண்டு வருகிறோம். 24இப்பொழுது, இவர்கள் வாஞ்சையுடன் காணவேண்டும் என்று இருந்த ''மனிதன்“ எப்படியிருப்பாரோ என்று காணும்படிக்கு வந்ததைப் பார்க்கிறோம். அவர்கள் வந்து ”ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்“ என்ற கேள்வியை கேட்டார்கள். இப்பொழுது, அவர்கள் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருந்தார்கள், மற்றவர்கள் அவரைக் குறித்து பேசக் கேட்டிருக்கிறார்கள், இன்னும் வேதத்திலும் அவரைக் குறித்துப் படித்து இருக்கிறார்கள், இருப்பினும் அவரைக் காண விரும்பினார்கள். 25இப்பொழுது என்னுடைய பொருளுக்காக ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ என்று வேதம் சொன்னதிற்கு வருகிறேன். இந்த மனிதர்கள் அவரைக் காணும்படி அவ்வளவு வாஞ்சையுள்ளவர்களாய் இருந்ததினாலே அவர்களுடைய வாஞ்சையை தீர்ப்பதற்கு தேவன் ஒரு வழியை உண்டாக்கினார். அவருடைய ஊழியக்காரர்களில் ஒருவனின் மூலம் அவரைக் காணும்படியான வழியை உண்டாக்கினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில், நாம் உத்தமமாய் அவரைக் காணும்படியான வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கும்போது அவர் தம்மை நம்மத்தியில் வெளிப்படுத்திக் காட்ட கடமைப்பட்டவராயிருக்கிறார் அல்லவா? (சபையார் அதற்கு ஆமென் என்கின்றனர்.) இது பெரிய அறிக்கையாய்; இருக்கிறது. வேதம் சரியில்லாமல் இருக்குமானால் நாம் எங்கே இருக்கிறோம்? பாருங்கள்? அவர் மாறாதவர் என்று வேதம் கூறுகிறது. அவர் ஒரு சில காரியங்களில் மாத்திரம் மாறாதவராய் இருக்க முடியாது. அவர் எப்படி இருந்தாரோ அதே விதமாக எல்லா காரியங்களிலும் மாறாதவராக இருந்தாக வேண்டும். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ என்று சொல்லி இருக்கிறாரே, மற்றும் இந்த கிரேக்கர்கள் அவரைக் காணும்படியாய் விரும்பினார்கள். எப்படியெனில் விசுவாசம் கேள்வியினால் வந்தது. அங்கே அவர்கள் வந்து திருப்தியடைந்தார்கள். அவர் தான் அந்த மேசியா என்று அறிந்தவர்களாய் கடந்து சென்றார்கள். அப்படிப்பட்ட ஒருவரை... இந்த இரவில் பார்க்க விரும்புவீர்களானால்‚ இப்பொழுது இந்த இரவின் பொழுதில் நமக்கு விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் நாம் 26சபைக்கு சென்று, நம்முடைய தசம பாகங்களை செலுத்தி வரும் போது... இது என்ன ஒரு கற்பனையானதற்கா செலுத்துகிறோம்? அல்லது வெறுமனே இந்த கட்டிடத்திற்கு நாம் செலுத்துகிறோமா? அல்லது இங்கே ஒன்றுமில்லாத காரியத்துக்கு வேஷம் போடுகிறவரா நம்முடைய மேய்ப்பன்? அல்லது கிறிஸ்தவ மார்க்கம் கிரேக்கர் அல்லது ஒரு ரோமானியர்களுடைய புராணக் கதையைப் போல் இருக்கிறதா? இது என்ன வெறும் கற்பனைக் கதையா? அல்லது இது நிஜமானதா? இப்பொழுது என்னைப் பொறுத்தவரை வேதம்; உண்மையாய் இருக்க வேண்டும் அல்லது தவறாய் இருக்க வேண்டும். உண்மையாய் இருந்தால் எல்லாமே உண்மையாய் இருக்க வேண்டும் அல்லது எதுவுமே அதில் உண்மையில்லை. பாருங்கள். இப்பொழுது அவர் வாக்குத்தத்தத்தைச் செய்திருப்பார் என்றால் அதை நிறைவேறுவதற்கு நீயும் நானும் கடமைபட்டவன் அல்ல. அந்த வாக்குத்தத்தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் உனக்கும் எனக்கும் இல்லை. இதை செய்யவேண்டியவர் அவர்தான். ஏனென்றால் சொன்னவர் அவர்தான். அது சரியே. அவர் என்ன சொன்னாரோ அதையே நாம் எடுத்துச் சொல்லுகிறோம். அதாவது ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ என்று சொல்லுகிறோம். அவர் இங்கே... 27எத்தனை பேர் இங்கே அவரைக் காண விரும்புகிறீர்கள்? அப்படி “ஆம்” என்று சொல்லுகிறவர்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அவரை நான்... (சபையார் “ஆமென்” என்கின்றனர்). அங்கே இரண்டு பேர் மாத்திரமே அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள், இங்கேயோ இருநூறு, முன்னூறு பேர் பார்க்க விரும்புகிறீர்கள். சரி, அப்படியென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில் நாம் ஏன் அவரைக் காண முடியாது?. அந்த விதமாகத் தான் நாம் அதைக் காண விரும்புகிறோம். ஒன்று அது உண்மையாய் இருக்க வேண்டும் அல்லது எதுவுமே உண்மையில்லை. ஆகையால் தான் நான் முதலில் உங்களுக்கு விளக்கினேன். இந்த வேதம் ஒன்று உண்மையாய் இருக்கவேண்டும் அல்லது எதுவுமே உண்மை இல்லை என்று. ஆகவே வேதம் ஏதாவது ஒன்றை கூறும் என்றால் நீங்கள் அதிலே பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்.தேவன் இந்த வார்த்தையை நிறைவேற்ற கடமைபட்டவராவார். ஏனெனில் வாக்குத்தத்தம் செய்தவர் அவரே‚ சரி, தேவன் ஒரு காரியத்தைச் சொல்லுவாரென்றால் அது அவ்விதமே இருக்கும். இப்பொழுது, நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்களோ அதைப் பொறுத்ததாய் இருக்கிறது. நீ எதை எதிர் பார்க்கிறாயோ அதையே பெரும்பாலும் பெற்றுக் கொள்வாய். இதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கும் படி விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் தேவனைப் பார்க்க வேண்டும் என்று விரும்புவீர்களானால், தேவன் காணப்படுவார். நீங்கள் தேவனிடத்திலிருந்து கேட்க வேண்டும் என்று விரும்புவீர்களானால்; தேவன் கேட்கப்படுவார். அவர் நேற்று இருந்தது போலவே இன்றும் இருக்கிறார். அவர் ஒருபோதும் மாறுவதில்லை. இப்பொழுது, இது ஒரு சிறு கதையை என் ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது; இதுஉண்மை சம்பவம். 28நான் என் சொந்த ஊராகிய இந்தியானாவில் வாழ்ந்து வருகிறேன். பிறப்பில் நான் ஒரு கென்டக்கியன். நாங்கள் ஓஹையோ (Ohio) நதி அருகே வசிக்கிறோம். அங்கிருந்து அரிசோனா முழுவதிலும் லெட்டியூஸ் கீரைவகை வளர, போதுமான அளவு தண்ணீர் போய்க் கொண்டிருக்கும். லட்சக்கணக்கான கேலண்கள் தண்ணீர் அந்த அணையிலிருந்து வந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஓர் நாளில் எங்களுக்குப் போதும் என்று அதைத் தவிர்க்கும் நிலைக்கு வருவோம். ஏன்னென்றால் எங்களுக்குத் தேவையைக் காட்டிலும் அதிகமானதைப் பெற்றிருக்கிறோம். அது ஒரு சதுப்பு நிலத்தைப் போல (Swamp) இருக்கும். இங்கே தான் உங்களுக்குத் தண்ணீர் தேவையாயிருக்கிறது. ஆனால் ஓர் நாளில் வரப்போகின்ற அந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சி வரும். அப்போது பாவம் பூமியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எல்லா காரியங்களும் சரியாக இருக்கும். அதுமட்டும் இப்படித்தான் நாம் இருக்கவேண்டும். 29ஒரு வயதான மீனவர் ஒருவர் அந்த நதியருகே வாழ்ந்து வந்தார். அவர் என்னுடைய சபையின் டீக்கனாக இருந்தார். அவருடைய பெயர் வைஸ்ஹார்ட். ஒரு அருமையான வயோதிப மனிதன். மற்றும் எங்களுடைய பட்டணத்திலே ஒரு குறிப்பிட்ட ஞாயிறு பள்ளிக்கூடம் இருந்தது. அது ஒரு அருமையான உலக பிரசிதிப்பெற்ற ஸ்தாபனமாகவும், ஐக்கியம் அருமையானதாகவும், அருமையான மக்களையும், மேய்ப்பரையும் கொண்டதாக இருந்தது. மற்றும் எங்கள் பட்டணத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பம் இந்த சபைக்குச் சென்றது. அந்தக் குடும்பத்தில் இருந்ததான ஒரு சிறு பையன் ஓர் நாளில் பிளானல் வரைபடத்தையும் (flannel graph readings) மற்றும் மற்றவைகளையும் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்து தன் தாயினிடத்தில் சென்று, “அம்மா, நீங்கள் சொல்லுகிற விதமாக தேவன் மகத்தானவராய் இருப்பாரானால், அவரை யாராவது காண முடியுமா?” என்றான். அதற்கு அவள், “மகனே, அம்மாவால் அதைச் சொல்ல முடியவில்லை. நீ உன் ஞாயிறு பள்ளி ஆசிரியரை கேட்க வேண்டும்” என்றாள். ஆகவே அவன் தன்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர் இடத்தில் சென்று, “ஆசிரியரே நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீர் அந்த மகத்தான தேவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறீர். சொல்லுகிறபடி அவர் அவ்வளவு மகத்தானவர் தான். அவர் இஸ்ரவேலர்களுக்காக சிவந்த சமுத்திரத்தைத் திறந்தார். அவர் சூரியனை உதிக்க வைத்தார். பூமியை அதன் பாதையில் சரியாக அதின் நேரத்தில் சுற்றும்படி செய்தார். இன்னுமாக அது போன்று அநேகம் செய்தார் என்றீர்.” ஆனால் அவரை யாராவது காணமுடியுமா? என்றான். அதற்கு அவள், “அது எனக்கு மிகவும் ஆழமாக இருக்கிறது என்று சொல்லி, நீ மேய்ப்பரைத் தான் கேட்க வேண்டும் என்றாள்”. அவன் மேய்ப்பர் இடத்தில் சென்று, “மேய்ப்பரே, தேவனை யாராவது காணமுடியுமா?” என்று சொல்லி “நீர் அவர் அவ்வளவு மகத்தானவர் என்று பீடத்திலிருந்து சொல்லக் கேட்டிருக்கிறேன்”, “அவரை யாராவது காண முடியுமா?” என்றான். அதற்கு அவர், “இல்லை மகனே, யாரும் அவரைக் காண முடியாது. ஏனென்றால் தேவனை யாரும் காண முடியாது. நாம் அவரை வெறுமனே விசுவாசிக்க வேண்டும். அவ்வளவு தான்” என்றார். 30நல்லது, இருந்தாலும் அது அந்த சிறுவனை திருப்திப்படுத்தவில்லை. அவன் ஒரு நாளில் அந்த வயதான மீனவரோடு நதியிலே இருந்தான். அவர்கள் “ஆறு மைல் தீவு” என்றழைக்கப்படுகிறதான இடத்துக்கு கடந்து போனார்கள். அந்த தீவு கென்டக்கி லூயிவில்லிருந்து ஆறு மைல் தூரமாயிருந்தது. அவர்கள் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அநேக மீன்களை பிடித்திருந்தார்கள். அப்படியாக போய்க் கொண்டிருந்தபோது ஒரு பெரிய புயல் காற்று வந்தது. பொதுவாக அங்கே அதிகமான புயல் காற்றும், மின்னல்களும், இடிமுழக்கமும், அதிகமான மழையும் வந்து அந்த தேசத்தையே நனைத்துவிடும். ஆகவே அவர்கள் அந்த கரைக்குச் சென்று மரங்களுக்குப் பின்பாகச் செல்ல வேண்டியதாய் இருந்தது. அதன் பிறகு புயல் காற்று நின்ற உடன் தங்களுடைய படகில் மறுபடியும் செல்ல ஆரம்பித்தார்கள். அது சாயங்காலம் (அல்லது) மதியம் என்று எண்ணுகிறேன். அப்பொழுது சூரியனானது டூசான் அல்லது அந்தப் பக்கத்தில் அஸ்தமிட்டுக் கொண்டிருந்தது. அது வானில் அந்த ஒளியை பிரதிபலித்தது கிழக்கு தொடுவானில் வானவில் தோன்றினது. மற்றும் அந்த வயதான மீனவர் தன்னுடைய துடுப்பைக் கொண்டு படகை ஓட்டிக் கொண்டிருந்தார். மழையானது வந்து எல்லா தூசியையும் அகற்றி முழுவதும் புதியதாய் இருப்பதைப் போல் காணப்பட்டது. அது ஒரு அருமையான நேரம்‚ இப்பொழுது அந்த படகு தண்ணீரினூடாய் போய்க் கொண்டிருக்கும் போது அந்த துடுப்பை தண்ணீரில் அடிக்கும் போது அங்கே ஏற்படுகிற ஓசையை மெச்சிக் கொள்ள அதை உபயோகப்படுத்துகிற மனிதன் மாத்திரமே அறிவான். அவனுடைய வெள்ளை தாடி தொங்கிக் கொண்டிருக்க, அவன் அப்படியே அந்த வானவில்லை கவனித்துக் கொண்டிருந்தான். 31அந்த வயதான கனவான் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காணும்படி இந்த சிறியவன் ஆர்வம் கொண்டான். அந்த வயதான மீனவருடைய வெள்ளை தாடியில் பளிங்கைப் போன்ற கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். அது படகின் முன் பாகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அவனை அதினுடைய பின்பாகத்துக்கு (stern) கிட்டே நெருங்கிச் செல்லுகிற அளவிற்கு மிகவும் ஆவல் கொள்ளச் செய்தது. அவன் அந்த வயதான மீனவரிடம் “ஐயா, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் அறிய வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறதான காரியத்தைக் குறித்து என்னுடைய தாயாரோ, அல்லது என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியரோ அல்லது என்னுடைய மேய்ப்பரோ யாரும் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று சொன்னான். அதற்கு அவர், “அது என்ன மகனே” என்று கேட்டார். அதற்கு அவன், “தேவனை யாராவது காண முடியுமா?” என்றான். இந்த கேள்வியினாலே அந்த வயதான மீனவர் மிகவும் நெகிழப்பட்டவராய் அவனுடைய துடுப்பை, படகுக்குள்ளாக இழுத்து அவன் மேலாக அவருடைய கரங்களைப் போட்டு அவனை கட்டி அணத்தான். மற்றும் அவருடைய கன்னத்தில் கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க “தேனே, கர்த்தர் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லி, இதோ நான் கடந்த ஐம்பது வருடமாய் பார்த்ததெல்லாம் தேவனை மட்டும் தான்” என்றார். ஆம், பாருங்கள்?. நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் தேவனைக் காண்கிற அளவுக்கு உங்களுக்குள்ளாக தேவனைப் பெற்றுக் கொள்ளலாம். பார்த்தீர்களா? ஆனால் அவரைக் காணவேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்கு வரும்வரை நீங்கள் அவரைக் காணமுடியாது. நீங்கள் அவரை சூரிய அஸ்தமனத்திலே காணலாம். பறவையின் குரலிலே அவரைக் கேட்கமுடியும். நீங்கள் எல்லா இடத்திலும் அவரைக் காணமுடியும். அவர் ஒவ்வொருவருக்கும் அருகில் இருக்கிறார். அந்த வயதான மனிதன் அவனுக்குள்ளாக அவ்வளவாக தேவனைப் பெற்றிருந்ததினால் அவனால் தேவனை எங்கேயும் காண முடிந்தது. நாமும் கூட அந்த விதமாகவே எங்கு பார்த்தாலும் தேவனை காண்கிறவர்களாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். 32இப்பொழுது மறுபடியுமாக “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்ற பொருளுக்குத் திரும்புவோம். இதை எப்படி அறிவோம்? “மெத்தோடிஸ்டு மக்களே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று நான் சொல்வேனாகில் அவர்கள் “ஆமென்” என்று சொல்லுவார்கள். “பாப்டிஸ்டு மக்களே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று நான் சொல்வேனானால், “ஆமென்” என்பார்கள் பெந்தெகொஸ்தே, சர்ச் ஆப் காட், மற்றும் அது போன்றவர்களை, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்றால் “ஆமென், நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்பார்கள். நீங்கள் அப்படி செய்வதினாலே நான் சந்தோஷம் அடைகிறேன். நானும் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது நாம் பட்டணத்தைச் சுற்றி இயேசு கிறிஸ்துவை தேடுவோமென்றால் பார்ப்பதற்கு அவர் எந்த விதமான நபராக இருப்பார்? இப்பொழுது அவர் இந்த இரவின் பொழுதில் இங்கே நம்முடன் இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கிறார். அவர் அப்படி இல்லையென்றால் வார்த்தை தவறாய்யிருக்கிறது. “ஓ அது என்னை ஊக்கப்படுத்தவில்லை என்று” நீங்கள் சொல்லலாம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை அதில் மீதியானதும் என்னை ஊக்கப்படுத்தவில்லை அவை எல்லாம் உண்மையாய் இல்லாத பட்சத்தில் எது ஊக்கம் அளிக்கிறதோ அல்லது எது ஊக்கமளிக்கவில்லையோ அதைக் குறித்து எனக்கு எப்படித் தெரியும். பாருங்கள்? அதை என்னால் தெரிந்தெடுக்க முடியாது. அது எல்லாமே தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. இப்பொழுது சரியாக அவர் இன்றிரவு நம் மத்தியில் இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கிறார். “எங்கே இரண்டு மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கிறார்கள்) நன்றி. 33இப்பொழுது அவர் இங்கே இருந்து, நாம்அவரைக் காணும்படிக்குச் சென்றால், அவர் எப்படிப்பட்ட ஒரு நபராய் இருப்பார் என்று எதிர் பார்ப்போம்? அங்கியைப் போட்டுக் கொண்டு, நீளமுடியும் தாடியும் கொண்டிருக்கிற மனிதரைத் தேடுவோமா? அந்த விதமாக இயேசு இருப்பாரா? அப்படி இருக்க முடியுமா? அப்படியென்றால் இந்த இரவில் யார் வேண்டுமானாலும் அங்கியும், நீளமுடியும் தாடியும் கொண்டிருக்க முடியும். எந்த மாய்மாலக்காரனும் அதைச் செய்ய முடியும். எகிப்திய மாவீரனைக் குறித்து தென் ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் (ஹோட்டன்டோட்) எப்படி அறியாமல் இருக்கிறார்களோ அதே போல் அங்கியை அணிந்துள்ள தேவனைக் குறித்து அறியாதவர்களாய் அனேகர் இன்று இரவு இருக்கிறார்கள். அது சரியே. ஆனால் நாம் அவ்விதமாக அவரை எதிர்பார்க்கவில்லை. ஒரு உயர் கனத்திற்குரியவராய் எதிர் பார்ப்போமானால் அவ்விதமாயும் காணமுடியாது. ஏனென்றால் அவர் அந்த விதமாகவும் இல்லை. 34வேறு எப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆணியால் உண்டான காயத்தையும், முட்களால் பதிந்த அடையாளத்தையுமா? அதை எந்த வேஷம் போடுகிறவனும் அப்படியாய் வேடமிட்டுக் கொள்ள முடியும். இன்னும் அது அவராக இருக்கமுடியாது. அவர் இன்னவிதமாய் அங்கியை அணிந்திருக்கிறார் என்று எப்படி அறிவோம். மற்றும் அவர் இன்ன விதமாய்த்தான் உடை உடுத்தி இருந்தார் என்று எப்படி அறிவோம்? நாம் அதை... இங்கே ஓவியர்கள் வரைந்துள்ள படத்தில் பார்க்கிறோமே அவ்விதமாய் காணப்படுவாரா? இல்லை. அது யாரோ ஒருவருடைய கற்பனையில் கிறிஸ்து இப்படி இருப்பார் என்று எண்ணி வரைந்த படமாகும். சரி. நாம் அவ்விதமாக எடுத்து கொள்வோம் என்றால் எது சரியானதாக இருக்கும்? ஹாப்மேன், சால்மான் மற்றும் வேறுபட்ட விதமாய் அநேகர்கள் அவரை விவரித்திருக்கிறார்கள். ஆகவே அவர் எவ்விதமாய் காணப்படுவார் என்று அறிவதற்கு குழம்பிவிடுவீர்கள். அவர் ஹாப்மேன் படத்தில் இருப்பதைப் போன்று காணப்படுவாரா அல்லது சால்மான் அல்லது மற்றவர்கள் வரைந்தது போல் இருப்பாரா? நமக்குத் தெரியாது. ஹாப்மேன் சரியாக இருப்பார் என்றால் சால்மான் தவறாயிருக்கிறார். பாருங்கள்? சால்மான் சரியாய் இருந்தால் ஹாப்மேன் தவறாயிருக்கிறார். பாருங்கள்? ஆகவே எது சரியானது என்று எடுத்துக் கொள்ள உங்களுக்குத் தெரியாது. 35அவரை நாம் எப்படி அடையாளங்கண்டு கொள்ளமுடியும்? நல்லது, அவர் ஆதியிலே தன்னுடைய கிரியைகளினால் அவர் செய்தவைகளினால், எப்படி அடையாளம் கண்டு கொள்ளப்பட்டாரோ அதே விதமாகத்தான் அடையாளங்கண்டு கொள்வோம். “பிதாவின் கிரியைகளை நான் செய்யவில்லை என்றால், என்னை விசுவாசிக்க வேண்டாம் என்று சொன்னார். ஆனால் கிரியை செய்யும்பொழுது என்னை விசுவாசிக்கவில்லை என்றாலும் என்னைப் பற்றி சாட்சி கொடுக்கிற என் கிரியையை விசுவாசியுங்கள் என்று சொன்னார்”. அவைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. நான் என்னவாக இருக்கிறேன் என்பதை அவைகள் சொல்லும். அவர் அப்படி அதை வெளிப்படுத்துவதற்கு எது அவரை அந்த விதமாக செய்தது என்று கண்டடைய வேண்டும். நேற்றைய தினத்தில் இயேசு கிறிஸ்துவை எது அடையாளங் காட்டினதோ அதே காரியம் தான் இன்றைய தினத்திலும் அவரை அடையாளங் காட்ட வேண்டியதாய் இருக்கிறது. இப்பொழுது மெதொடிஸ்டுகளாகிய நாம் நம்முடைய சபை அவரை அடையாளங்கண்டு கொள்கிறது என்று நினைக்கலாம். பாப்டிஸ்டுகளாகிய நாம் நம்முடைய சபை அவரை அடையாளங்கண்டு கொண்டது என்று நினைக்கலாம். பெந்தெகொஸ்தேயினராகிய நாமும்..., பாருங்கள்? நான் அவர்கள் எல்லாருமாய் இருக்கிறேன். பாருங்கள்? அப்படியாய் நாம் நினைக்கிறோம். அதாவது நம்முடைய சபை அவரை அடையாளங்கண்டு கொண்டது என்று நினைக்கிறோம். 36ஒரு சமயம் நான் ஆர்கன்சாவில் உள்ள லிட்டில் ராக் என்ற இடத்தில் இருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. சில அருமையான ஆர்கன்சா நண்பர்கள் இங்கே இருக்கக்கூடும். அங்கே ஓர் இரவு அந்த ராபின்சன் நினைவு அரங்கத்திலே இருந்தபோது, ஒரு பிச்சைக்காரன் ஊன்று கோலோடு தெருவிலே உட்கார்ந்து பென்சில் விற்பனை செய்து கொண்டிருந்தான். அவன் தன்னுடைய சுகத்தைப் பெற்றுக் கொண்டான். அடுத்த நாளில் தன்னுடைய ஊன்று கோலை தன் தோளின் மேலாக வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்து சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கே அந்த மூன்றாவது மாடத் (Balcony) திலிருந்து அங்கே இருந்த எல்லோருடைய கவனத்தையும் அவன் பக்கமாக இழுத்துக் கொண்டிருந்தான். மற்றும் அவனுடைய சத்தத்தின் நிமித்தமாக எங்களுக்கு பிரசங்கம் பண்ணுவது மிகவும் கடினமாக இருந்தது. அத்தெருவில் மேலும் கீழுமாக சென்றும் வியாபாரம் செய்கிற ஒவ்வொரு இடத்திற்குச் சென்றும் அந்த மூலையில் இருந்து உரக்க சத்தம் போட்டு சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கூட்டத்தின் மத்தியில் அழைக்கப்பட்டிருந்த போது கர்த்தராகிய இயேசு அவனைச் சுகப்படுத்தினார். அவன் இப்படியாக “சகோதரன் பிரான்ஹாமே, உம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு நான், “அது என்ன ஐயா”, என்றேன்? அவன் சொன்னது, “உமக்குத் தெரியுமா... அவன் ஒரு நசரேயனாய் இருந்தபடியால், நீர் பிரசங்கிப்பதைக் கேட்டு நீர் ஒரு நசரேயன் என்று நினைத்தேன் என்றான்”. மற்றும், “உம்மைச் சுற்றி அநேக பெந்தெகொஸ்தேகாரர்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதினால் சிலர் நீர் பெந்தெகொஸ்தேயினர் என்றார்கள். திரும்பவும் யாரோ ஒருவர் நீர் மிஷனரி பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவர் என்று சொல்லக் கேட்டேன். இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்றான்?”. அதற்கு நான் “அதெல்லாம் உண்மைதான். நான் ஒரு பெந்தெகொஸ்தே நசரேயன் பாப்டிஸ்டு என்றேன்”. அதுதான். அது அவ்வளவுதான். பார்த்தீர்களா? நாம் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்போமானால், நாம் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாய் இருக்கிறோம். மற்றும் இந்த பெயர் குறிப்பு (brand) (ஸ்தாபனப் பெயர்கள்) எல்லாம் அர்த்தமற்றதாயிருக்கும். 37நான் கொலராடோவிலுள்ள ஒரு பண்னையில் கால் நடைகளை பராமரிக்கும் பணியில் இருந்தேன். அங்கே ட்ரபுல்சம் ஆற்றின் (Troublesome River) அருகே இருக்கிறதான பள்ளத்தாக்கில் ஹாயர்போர்டு கழகம் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மந்தையை மேய்க்கிறவர்கள் தங்களுடைய கால்நடைகள் மேய்ந்து கொண்டே வழி மாறி குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிப் போகாதபடிக்கு அதைச் சுற்றி வேலி அடைப்பார்கள். கால் நடைகள் உள்ளே வரும் போது அந்த அதிகாரி அங்கே நின்று கொண்டு அவற்றைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பான். அந்த அதிகாரிகள் கணக்கெடுப்பதை அநேக முறை நான் என்னுடைய கால்களை அந்த குதிரைச் சேனக்கொம்பின் மேலாக வைத்துக் கொண்டு கவனித்திருக்கிறேன். அப்போது எல்லா பெயர் குறிப்பு வகையைச் சேர்ந்ததும் உள்ளே செல்லும். பள்ளத்தாக்கில் இருக்கிற எல்லா வகை பெயர்கள் உள்ளதும் உள்ளே செல்லும். அப்போது அந்த அதிகாரி அது எந்த பெயர் வகையைச் சேர்ந்தது என்று பார்ப்பதில்லை. ஆனால் அது இரத்தச்சீட்டு (blood tag) உடையதாக இருக்கிறதா என்று பார்ப்பான். அந்த இரத்தச் சீட்டு அது ஹாயர்போர்டுக்குரிய கலப்படமில்லாத இனம் தான் என்று சொல்லவேண்டும். அப்படியில்லை என்றால் அது அந்த பள்ளத்தாக்கிலே மேய முடியாது. அந்த இரத்தச் சீட்டு இல்லாமல் உள்ளே போக முடியாது. அதை கவனித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாளில் எனக்கு ஒரு எண்ணம் உண்டாகி கூச்சலிட்டேன். “நியாயத்தீர்ப்பு நாளிலேயும் அந்த விதமாகத்தான் இருக்கும். அப்போது அவர் அவர்கள் எந்த பெயர் குறிப்பைப் (ஸ்தாபனப் பெயர்கள்) பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கமாட்டார், ஆனால் இரத்த சீட்டைக் கொண்டவர்களாயிருக்கிறோமா என்று பார்ப்பார். அதுதான் காரியம்”. அவர் அந்த இரத்தத்தைப் பார்க்கும்போது, நாம் உள்ளே போகலாம். அவ்வளவுதான். பாருங்கள்? அந்த நேரத்தில் நம்முடைய பெயர் குறிப்புகள் எல்லாம் எப்போதோ மறக்கப்பட்டிருக்கும். அது சரியே. அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அது உண்மை. இப்பொழுது... 38இப்பொழுது நேற்றைய தினத்தில் அவர் எப்படியாய் தன்னை அடையாளப்படுத்தினார் என்று பார்ப்போமானால் அவர் இன்றைக்கு எப்படியாய் இருப்பார் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் நேற்று எப்படி இருந்தாரோஅதே விதமாக இன்றைக்கும் தன்னை அடையாளப்படுத்துவார். அது உண்மையா? (சபையோர் “ஆமென்” என்கிறார்கள்) அவர் அப்படியே தேவனுடைய கிரியைகளைச் செய்வார். இப்பொழுது அவர் மாற்றமடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட கல்வியை அவர் பெற்றவராக இருக்க முடியாது. ஏனென்றால் அவர் பள்ளிக்குச் சென்றதாக எந்த சான்றும் இல்லை. மற்றும் அவர் சொல் நயமுள்ள பேச்சாளராக இருக்க முடியாது, ஏனென்றால் சாதாரண மக்கள் அவர் சொல்வதைக் கேட்டு மகிழ்கிற அளவிற்கு அவருடைய பேச்சு (மொழி) மிகவும் எளிமையானதாக இருந்தது. பாருங்கள்? ஆகவே அவர் ஒரு சாதாரண மனிதனே. ஆனால் எது அவரை அடையாளம் காட்டும் என்றால், வேத வாக்கியம் எந்த விதமாக அவர் இருப்பார் என்று உரைக்கிறதோ அதுவே அவரை அடையாளப்படுத்தும். அந்த விதமாக நாமும் அவரை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும். அந்த விதமாக தான் அவர் அன்று அடையாளங்கண்டு கொள்ளப்பட்டார். ஏனென்றால் அவர் பிரமிக்கத்தக்க எந்த விதமான மனிதனுடைய உடையையும் அணிந்திருக்கவில்லை. அவர் பெருமையாக சொல்லிக்கொள்ள எந்த ஸ்தாபனமும் அவருக்கு இல்லை. “நான் இந்த பெரிய கூட்டத்தாரை” சேர்ந்தவன் என்பதற்கு எந்த குறிப்பிட்ட ஐக்கியமும் இல்லை. பாருங்கள், அவர் தன்னை அடையாங்கண்டு கொள்ளும்படி, உரைக்கப்பட்டதும் நிரூபிக்கப்பட்டதுமான தேவனுடைய கிரியைகளை மாத்திரமே அவர் கொண்டிருந்தார். அதுவே அவருடைய பாராட்டுச் சான்றுகளாய் இருந்தது. அதுவே அவருடையவைகள். “என்னில் பாவம் உண்டென்று யார் குற்றப்படுத்த முடியும்”? பாவம் என்றால் அவிசுவாசம். பாருங்கள். “யார் என்னை குற்றவாளியாய் தீர்க்கமுடியும்? இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ”நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ அதன்படி செய்யவில்லை என்றால், நான் எங்கே தவறினேன் என்று நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்“. பாருங்கள்? இப்பொழுது அந்த விதமாகத் தான் இன்றும் அது அடையாளங் கண்டுகொள்ளப்படும். 39அப்படியென்றால் அவர் அந்நாளில் எவ்விதமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார் என்று பார்போம். ஒரு குறிப்பிட்ட ஐக்கியத்தின் மூலமாகவா? ஒரு குறிப்பிட்ட கல்வியின் மூலமாகவா? அல்லது ஏதோ அறிவியல் சார்ந்த அடையாளத்தைக் கொண்டிருப்பதின் மூலமாகவா? அல்லது அவரே தேவனுடைய குமாரன் என்று வேதவாக்கிய சாட்களின்படி நிரூபித்ததினாலா? “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளே என்னைக் குறித்து சாட்சிக் கொடுக்கின்றன” என்றார். அவரைக்குறித்து வேத வாக்கியங்களே சாட்சி கொடுக்கிறது. ஆகவே வேத வாக்கியங்களே அவரை அடையாளம் காட்டினது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கிறார்கள்) அது தான் அவரை இன்றைக்கும் அடையாளம் காட்ட வேண்டும். அப்பொழுது அது அவர் தானா என்றும் நாம் சரியா அல்லது தவறா என்றும் அறிவோம். அவர் மாறாதவராக இருப்பார் என்றால் அவர் அதையே செய்வார். இப்பொழுது இதை எடுத்து... 40இப்பொழுது நாம் பரிசுத்த யோவான் எழுதின புத்தகத்திலிருந்து அடுத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் அமைதியாக வாசித்து அவர் நம் மத்தியில் தோன்றி, தான் தேவன் என்று நிரூபிக்கிறாரா என்று பார்ப்போம். பாருங்கள். அவர் இன்னும் ஜீவிக்கிறாரா என்று பார்ப்போம். அவர் மரிக்கவில்லை என்று நாம் விசுவாசிக்கிறோம். அதுவும் ஒரு காரியமே... நான் ஒரு மிஷனரியும் கூட, கிட்டத்தட்ட வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிரசங்கித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஏழு முறை சுற்றி வந்திருக்கிறேன். அங்கே எல்லா விதமான மார்க்ககங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில் சூனியக்காரர்கள் முன்பாகவும், மற்றும் மனிதர்களை வணங்குபவர்கள் முன்பாகவும் நின்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதிலே புத்தர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், மற்றும் சமணர்கள் போன்ற எல்லோரும் தங்களுடைய மார்க்கத்தின் நிறுவனரைக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்த மதங்களை நிறுவின எல்லா மத நிறுவனர்களும் மரித்துப் போனார்கள். அவர்களுடைய கல்லறைகள் எங்கே இருக்கிறது என்று அவர்களால் காட்டமுடியும். சரியாக அங்கேயே அவர்கள் கிடக்கிறார்கள். அவர்களுடைய எலும்புகளும் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவத்திற்கோ அங்கே காலியான கல்லறை இருக்கிறது. அவர் ஜீவிக்கிறார். அதிலும் ஒரு மகத்தான காரியம் என்னவென்றால் அவர் ஜீவிக்கிறார் என்று இன்னுமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். பாருங்கள்? ஆகையால் தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கோ அவர் உயிர்த்தெழுந்தார், இவ்விடத்தில் இல்லை மற்ற எல்லாக் கல்லறையும் மூடியிருக்க இந்த கல்லறை மட்டும் காலியாய் இருக்கிறது என்று அறியும்போது அதிலே இளைப்பாற முடிகிறது. இந்த நற்செய்தியை சகோதரர்களுக்குளே சொல்ல இருக்கிறோம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார்.... 41இப்பொழுது நாம் முன்பாக வாசித்த அதே பரிசுத்த யோவானுக்குத் திருப்புவோம். மற்றும் வேதத்திலிருக்கிற எல்லாப் புத்தகங்களும் ஒரே செய்தியைக் கொடுக்கும். அது அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அது வேதவாக்கியத்தின் படியாக இல்லை. அவர் எப்பொழுது பிறந்தார் என்பதை நாம் காண்கிறோம். பரி. யோவான் முதல் அதிகாரத்திலிருந்து துவங்குவோம்; அவர் பிறந்தபோது காபிரியேல் தூதன் அவருடைய தாயாகிய மரியாளிடத்தில் அவருடைய பிறப்பை அறிவித்ததையும், அதன்பிறகு அவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமானதையும் அறிந்திருக்கிறோம். மற்றும் முப்பது வயதிலே அவர் தன்னுடைய உறவின் முறை சகோதரன் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். மற்றும் உடனடியாக சோதிக்கப்படுவதற்கு நாற்பது நாட்கள் வனாந்திரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆவியின் வல்லமையோடு திரும்பி வந்தார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு தன்னுடைய ஊழியத்திற்குத் திரும்பினார். 42நினைவிருக்கட்டும், அவர் தன்னுடைய சீஷர்களை ஆவியின் வல்லமையினால் நிரப்பப்படும் மட்டும் அவர்கள் பிரசங்கிக்கவோ அல்லது எந்தக் காரியத்தையும் செய்யவோ தடை செய்தார். பாருங்கள்? “உன்னதத்திலிருந்து வல்லமையை நீங்கள் பெறும் மட்டும் எருசலேமிலே தங்கியிருங்கள் என்றார்” பாருங்கள்?. இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பை மக்கள் காண முடிகிற அளவு; இனி அது நீங்களல்ல, தேவனே‚ என்கிற விதமாகும் வரை வெளியே போகாதிருங்கள். அப்பொழுது மக்கள் விசுவாசிப்பார்கள். ஏனென்றால் அது நீங்கள் அல்ல, அது அவரே. அவர் முன்னறிந்த யாவரையும் அழைப்பார். அவர்கள் அதைக் காண்பார்கள். “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கும்”. அதன் பிறகு அவர்உடனடியாக தன்னுடைய ஊழியத்திற்குள் சென்றபோது என்ன நடந்தது என்று பார்க்கிறோம். இங்கே ஒரு சில கதாபாத்திரத்தை குறிப்பிடப் போகிறேன். 43இந்த பூமியில் மூன்று இனத்தார்கள் மாத்திரம் இருக்கிறார்கள் என்று நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அநேக தேசத்தார்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால் மூன்று இனம் மாத்திரம் உண்டு. அது காம், சேம், யாபேத்திலிருந்து வந்த மக்கள். அதுவே யூதர், புறஜாதியார் மற்றும் சமாரியர்கள் ஆவர். பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, திறவுகோல் பேதுருவினிடத்தில் கொடுக்கப்பட்டிருந்ததைப் பார்க்கிறோம், அவன் எருசலேமில் பெந்தெகொஸ்தே நாளன்று யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் மற்றும் கொர்நெலியு வீட்டில் புறஜாதிகளுக்கும் திறந்தான். அப்போஸ்தலர் 10:49. அது முதல் உலகில் உள்ள எல்லா இனத்தார்களுக்கும் கொடுக்கப்பட்டதாய் இருக்கிறது. இந்த இனத்தார்களுக்குத் திறக்கும்படி திறவுகோலை அவன் கொண்டிருந்தான். 44இப்பொழுது புறஜாதியார்கள் எந்த மேசியாவிற்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. நாம் அந்நியர்களாயும் ஆங்கிலோ-சாக்சனாகவும் இருந்தோம். தண்டாயுதங்களைச் சுமந்து விக்கிரகங்களை வணங்கி வந்தோம். மற்றும் நாம் எந்த மேசியாவிற்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் யூதர்கள் ஒரு மேசியாவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். சமாரியர்களும் ஒரு மேசியாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். சமாரியர்கள் பாதி யூதனும், பாதி புறஜாதியார்களுமானவர்கள். இப்பொழுது அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரமே அவர் தன்னை அடையாளப்படுத்திக் காண்பிப்பார் என்று நாம் அறிவோம். அதே விதமாகத்தான் அவருடைய இரண்டாம் வருகையிலும் இருக்கும். ஆனால் அவரைக் குறித்து உலகம் ஒன்றுமே அறிந்திருக்காது. அவர் வந்து தன்னுடைய சபையை எடுத்துக் கொண்டு செல்வார். அவரை எதிர் நோக்காதவர்கள் இங்கேயே விடப்படுவார்கள். தம்மை எதிர் பார்க்கிறவர்களுக்காகவே அவர் வருகிறார். 45இப்பொழுது அவர் தன்னுடைய சொந்த ஜனத்தாராகிய யூதர்களிடத்தில் வந்தார். இப்பொழுது அவர் எப்படியாய் தன்னை அடையாளப்படுத்தினார் என்று பார்ப்போம். முதலாவது நாம் அந்திரேயாவையும் மற்றும் பிலிப்புவையும் பார்க்கலாம். அந்திரேயா இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் யோவானுடைய சீஷராய் இருந்ததினாலே அவரைக் காணும்படியாகச் சென்றார்கள். அவர்கள் சென்ற போது அவருடைய மகத்தான கிரியைகளைக்கண்டு அவருடனே வீட்டிற்குச் சென்று, இவர் தான் அந்த மேசியா என்று கண்டு முழு திருப்தியோடு மறுநாளில் திரும்பினார்கள். அதன் பிறகு அந்திரேயா பின்னர் பேதுரு என்றழைக்கப்பட்ட தன்னுடைய சகோதரனாகிய சீமோனைச் சந்திக்கிறான். நீங்கள் சீமோன் பேதுரு மற்றும் அந்திரேயாவினுடைய வரலாற்றைப் படிப்பீர்கள் என்றால் அவர்கள் அதிக பக்தியுள்ள பரிசேயர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்று அறிவீர்கள். அவர்களுடைய தகப்பன் மகத்தான மிகவும் திடமான விசுவாசி. அவன் அப்படியாக தன்னுடைய குமாரர்களிடத்தில், “என் மகன்களே, ஏதேன் தோட்டத்தில் வாக்குத்தத்தம் உரைக்கப்பட்டதிலிருந்து காலங்களினூடாக மேசியாவின் வருகைக்காக நாம் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வருவதற்கு முன்பாக ஒரு விதமான குழப்பம் இருக்கும். ஏனென்றால் அந்த அசலானதை மறைக்கும் பொருட்டாக தன்னால் இயன்றமட்டும் சாத்தான் எல்லா போலிகளையும் போடுவான்” என்றான். 46அவன் எப்பொழுதுமே அப்படித்தான் செய்வான். எப்பொழுதும் அப்படியே செய்வான். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், ஒரு போலியான ரூபாயை பார்க்கும்போது, அது அங்கே செய்யப்பட்ட உண்மையான ரூபாய் ஒன்று இருக்கிறதைக் குறிப்பிடுகிறது. மாயமாலக்காரனுடைய பாகத்தை யாராவது செய்வார்கள் என்றால், அவர்கள் பார்த்து பாவனை செய்வதற்கு ஒரு அசலான காரியம் எங்கேயோ இருக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, அப்படி நடக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், என் குமாரர்களே, நீங்கள் இதைத்தான் நினைவில் கொள்ளவேண்டும். நாம் வேதாகம செய்தியை விசுவாசிக்க வேண்டும். அதாவது நம்முடைய ஊழியக்காரன், நமக்கு கட்டளைகளையும் நியாயப் பிரமாணங்களையும் கொடுத்த தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே, 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நம் மத்தியில் எழுப்புவார்' என்றான். மற்றும் இப்பொழுது, மேசியா வரும்போது அவர் தீர்க்தரிசியாக இருப்பாரென்று வேதம் சொல்லுகிறது. மற்றும் நாம் ஒரு தீர்க்கதரிசியைப் பெறும் போது, அவர் தீர்க்கதரிசி என்று தேவனால் அடையாளம் காட்டப்பட்ட பிறகு தான் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதிக்கப்பட்டிருக்கிறோம்“ என்றான். 47கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது என்று வேதத்தை வாசிக்கிறவர்களாகிய நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள்... அவர்களிடத்தில் மாத்திரமே வந்தது. “அந்த வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது”. மற்றும் இந்த மனிதன் அடையாளங் கண்டு கொள்ளப்படுவதற்கு ஒரேவழி... நானூறு வருடங்களாக அவர்களுக்குத் தீர்க்கதரிசி இருக்கவில்லை. மல்கியா தான் அவர்களுடைய கடைசி தீர்க்கதரிசியாக இருந்திருக்க வேன்டும். தொடர்ந்து அவர் “இந்த மேசியா வரும்போது... அநேக கள்ள மேசியாக்கள் எழும்புவார்கள். இவ்விதமான அநேக காரியங்கள் நடக்கக்கூடும்”. ஆனால் அவர் வரும்போது, தேவன் அவரை அடையாளங்காட்டுவார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். வேதமானது அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று கூறுகிறது. மற்றும், “உங்கள் மத்தியிலே யாராவது ஒருவன் ஆவிக்குரியவனாகவோ அல்லது தீர்க்கதரிசி என்றோ சொல்வானாகில், தேவனாகிய நான் அவனுக்கு தரிசனங்கள் மூலமாக மற்றும் இன்னுமாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். அவன் சொன்னது நடந்ததென்றால் அவனுக்குச் செவிகொடுங்கள் அப்படியில்லை என்றால் அவனுக்கு செவியை சாய்க்காதிருங்கள்” என்று வேதம் கூறிற்று... 48அது மேன்மையும் நீதியுள்ளதுமான காரியமாய் இருக்கிறது என்றே அர்த்தமாகிறது. அவன் சொல்லுவது உண்மை என்றால் எப்பொழுதுமே அது சரியாக இருக்க வேண்டும். நீங்கள் அதை யூகித்து சொல்லுவதாக இருக்கக் கூடாது. அது சரியாகத்தான் இருந்தாக வேண்டும். அது சரியாய் இருக்கும் பட்சத்தில் அது தேவனாகத்தான் இருக்க வேண்டும். அது சரியாக இல்லை என்றால், அது தேவன் இல்லை. அது அவ்வாறாகத்தான்... ஆகவே அதை விசுவாசிப்பதற்கு நன்கு அறிந்திருந்தார்கள். எல்லா யூதர்களும், எல்லா உண்மையான யூதர்களும் அதை அறிவார்கள். அந்நாளிலேயும் கூட இன்றைக்கு இருக்கிற சபையைப் போன்று மென்மையானவர்களாகவும், கோட்பாடுகளினாலேயும், தகுதி தரத்தைப் பார்க்கிறவர்களாகவும், பிரச்சனைக்குரியவர்களாகவும், பாத்திரங்களைக் கழுவும் சடங்குள்ளவர்களாகவும் இருந்தார்கள். இயேசு இவ்விதமாய் “நீங்கள் பாரம்பரியங்களினாலே தேவனுடைய பிரமாணங்களை எந்த விளைவையும் உண்டாக்காதபடிக்கு மாற்றிப் போட்டீர்கள்” என்றார். இன்றைக்கு இருக்கிறதைப் போன்றே அவர்களுடைய பாரம்பரியங்களினாலே அதை அவர்கள் செய்தார்கள். அது ஏறக்குறைய இன்று உள்ள நிலையைப் போன்றே அன்றும் இருந்தது. அதேகாலம் மறுபடியும் வருகிறது. 49இப்பொழுது இதைக் கவனியுங்கள், அவர் தான் மேசியா என்று அந்திரேயா திருப்தியடைந்தான். அவன் செய்தவைகள் எல்லாம் வேதத்தில் எழுதப்படவில்லை. ஆனால் அவன் பேதுருவிடம் சென்று, அப்பொழுது அவனுடைய பெயர் இன்னுமாக சீமோனாக இருந்தது. அவனிடத்தில், “சீமோனே நீ வந்து இந்த மனிதன் பேசுகிறதைக் கேட்க விரும்புகிறேன். யோர்தானில் இருக்கிற தீர்க்கதரிசி இந்த மனிதன் வருவார் என்று சொன்னார். மற்றும் தேவனுடைய ஆவி புறாவைப் போல் அவர் மேல் வந்திறங்கினதைப் பார்த்தேன் என்று அத்தீர்க்கதரிசி சொன்னார். அவரே தேவனுடைய குமாரன் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நீ வந்து அவர் பேசுகிறதைக் கேட்க விரும்புகிறேன். அவர் மேலாக ஒரு ஒளி ஒன்று அடையாளமாய் பின் தொடர்கிறது” என்று சொன்னான். 50ஆகவே சீமோன் வந்து பார்ப்பதற்கு சிறிது தயக்கம் அடைந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் அவன் கடைசியாக இயேசுவின் பிரசன்னத்தில் வந்தபோது... இப்பொழுது அவர் யார் என்று அவர் தன்னை அடையாளப்படுத்தினதையும் அவருடைய சான்றிதழ்கள் என்னவாய் இருந்தது என்றும் பார்க்கப் போகிறோம். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதன் பிறகு... நான் இன்னுமாக யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் தான் இருக்கிறேன். இப்பொழுது இயேசு, சீமோன் அவரிடத்தில் வருவதைக் கண்டு “இதோ இஸ்ரவேலன்” என்றார். அவனை அறிந்ததினாலே அவனைக் குறித்துப் பேசினார், “உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்றார். அது அவனுக்குள்ளாக இருந்த விறைப்பை எல்லாம் எடுத்துப் போட்டது. அவனுடைய பேர் சீமோன் என்று அவருக்கு எப்படித் தெரியும்? இன்னுமாய் முன்பாகவே அவனுக்கு ஜீவ வழியைப் போதித்த, தேவ பக்தியுள்ள அவனுடைய வயதான தகப்பனைக் குறித்து எப்படித் தெரியும்? அவர் மேசியாவாகத் தான் இருக்கவேண்டும் என்று அறிந்தான். ஏனென்றால் அது ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும். உடனடியாக அவருடைய பாதத்தில் விழுந்தான். எந்தப் படிப்பும் இல்லாமல், எந்த முன் அனுபவமும் இல்லாமல் இருந்த அவனுக்கு இயேசு கிறிஸ்து ராஜ்யத்தின் திறவுகோலைக் கொடுத்து எருசலேமின் சபைக்கு தலைமையாய் நிறுத்தும் அளவிற்கு அவன் அவ்வளவாய் தன்னை அர்ப்பணித்தான். “உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்”, என்று அவனுடைய தகப்பனாரின் பெயரைச் சொல்லி, தான் யார் என்று அடையாளப்படுத்தின உடனே, அது இயேசுவை அந்த பரிபூரணமான தீர்க்கதரிசியாகக் காண்பித்தது. பேதுரு அதை விசுவாசித்தான். 51இப்பொழுது நாத்தான்வேல் (அதாவது) பிலிப்பு என்ற பேர் கொண்ட ஒரு நபர் அங்கே நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம். அது பிலிப்பு என்று நம்புகிறேன். அவன் அங்கே நின்று கொண்டு இவைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு உறுதியுள்ள இஸ்ரவேலன். மற்றும் அவனோடு ஒன்றாய்ச் சேர்ந்து படித்த சகோதரன் (நண்பன்) அவனுடைய நினைவுக்கு வந்தது. இப்பொழுது நீங்கள் எப்பொழுதாவது எருசலேமுக்கு சென்றிருப்பீர்களென்றால் இயேசு பிரசங்கித்த இடத்திலிருந்து, வேதபாட மாணவனான நாத்தான்வேலாகிய அவனுடைய நண்பன் இருந்த இடத்திற்குப் போகவேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் மலையைச் சுற்றி பிரயாணப்பட வேண்டியதாய் இருக்கும். ஆகவே, அவன் சத்தியம் இன்னதென்று அறிந்த பிறகு உடனடியாக புறப்பட்டுச் சென்றான். அது கிரியை செய்வதைக்கண்டு, அது தான் அந்த மேசியா என்று திருப்தியடைந்தான். நமக்குள் அந்த ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியுமானால்; நாம் அந்த ஆர்வத்தோடு இருப்போமானால் அந்த முத்தைக் கண்டுபிடித்தோம் என்று நாம் அறிவோம். 52அவன் அந்த மலையைச் சுற்றிக் கொண்டு போனான். அவன் நாத்தான்வேலைக் கண்டு பிடித்ததில் எந்த சந்தேகமுமில்லை. அவனுடைய வீட்டிற்கு வந்து அவனுடைய கதவைத் தட்டியிருக்கலாம். அவனுடைய மனைவி வந்து “அவர் வெளியே இருக்கிற திராட்சைத் தோட்டத்தில் இருக்கிறார்” என்று சொன்னாள். ஒருவேளை அவன் ஒலிவ மரங்களை வளர்த்திருக்கக்கூடும். அதன் பிறகு அவனுடைய திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றான். அப்பொழுது அங்கே அவன் ஜெபித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஒரு கிறிஸ்தவ கணவானாய் அவனைத் தொந்தரவு செய்யாமல் இருந்தான். அவனோ தன்னுடைய முழங்காலிலே நின்று ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருவேளை இப்படியாய் ஜெபித்திருக்கலாம். “யேகோவா தேவனாகிய கர்த்தாவே எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. மற்றும் நான் மேசியாவிற்காக எதிர் நோக்கி ஆவல் கொண்டிருக்கிறேன். நான் கடந்து செல்வதற்கு முன்பாக அவரைக் காணட்டும்” என்றான். 53அதன் பிறகு “ஆமென்” என்று சொன்ன உடன் நாத்தான்வேல் எழும்பி நின்றான். இப்பொழுது அதிகமாக பேசுவதற்கு நேரமில்லை என்பதை இங்கே கவனியுங்கள். ஏனென்றால் அவன் ஒரு கட்டளையைப் பெற்றிருந்தான். ஆனால் இன்றைக்கு இருக்கிற காரியம் என்னவென்றால் நாம் செய்ய வேண்டியவைகளை விட்டுவிட்டு, அதைத் தவிர்க்கும்படியாய் மற்ற காரியங்களைக் கொண்டிருக்கிறோம். நாம் காரியத்திற்கு வருவோம். அவர் தேவனா இல்லையா? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறாரா அல்லது அவ்விதம் இல்லையா? அவர் இன்னும் இயேசுதானா? அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினாரா? அவர் எழுந்தாரா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). அப்படி அவர் இல்லை என்றால் அதை மறந்துவிடுங்கள். அவர் அப்படியாக இருக்கிறார் என்றால் நாம் ஊக்கத்துடன் துவங்குவோம். அவருடைய ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஜெபித்து, கூட்டங்களை ஆரம்பிப்போம். ஏதாவது செய்வோம். கவனியுங்கள், அவன் நேரடியாகச் சொல்ல வேண்டிய காரியத்திற்குள்ளாக வந்தான். “நாங்கள் யாரைக் கண்டுபிடித்தோம் என்று வந்து பார். நசரேயனாகிய இயேசு யோசேப்பின் குமாரன்”, என்று சொன்னான். 54இப்பொழுது, இந்த பாரம்பரியத்திலுள்ள மனிதன் தான் முழங்கால்படியிட்டதினாலே தன்னுடைய துணியிலிருந்த தூசியை தட்டிவிட்டதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. அவன் பிலிப்புவே, “ஒரு நிமிடம் பொறு என்றான்”. நீ ஒரு புத்திசாலியான மனுஷன் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது நீ அதை விட்டுவெகு தூரமாயிருக்கிறதை நீ அறியவில்லையோ. நாம் இருவருமே ஒன்றாக வேதத்தை வாசித்திருக்கிறோம். ஆனால் நசரேயனாகிய இயேசு என்றா சொல்லுகிறாய் சர்வ வல்லமையுள்ள தேவன் டூசான் (அல்லது) என்னுடைய ஊராகிய ஜெபர்சென்வில்லில் இருக்கிறதைக் காட்டிலும் மிகவும் தாழ்ந்த மக்கள் வசிக்கிறதான அந்த மோசமான பட்டணமாகிய நாசரேத்தைத் தேர்ந்தெடுத்து அதிலே வருவார் என்று சொல்லுகிறாயோ? ஏன்? பிரதான ஆசாரியன் அப்படியாய் அவர் வானத்திலிருந்து தாழ்வாரத்தை, படிக்கட்டுகளை கீழே இறக்கி நேராக நம்முடைய வளாகத்திற்குள்ளாக இறங்கி வருவார் என்று விசுவாசிக்கிறதை அறிந்திருக்கிறாயே. அப்படித்தான் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். 55ஆனால் இவ்விதமாக அவர் வருவார் என்று நாம் நினைக்கிற வண்ணமாக அவர் எப்பொழுதும் வரமாட்டார் என்று நீங்கள் அறிவீர்களா? பாருங்கள், அவர் மிகவும் தாழ்மையான வழியில் வருகிறார். மக்கள் என்ன விதமாக, எப்படியெல்லாம் அவர் வர வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ அதே விதானத்தில் அவர் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் தாழ்மையாகச் செல்வீர்கள் என்றால் நீங்கள் அங்கே தேவனை காண்பீர்கள். விஞ்ஞானிகள் விண்வெளிக்குள்ளாக அல்லது விண்ணில் உள்ள சுற்றுப் பாதையில் மனிதனை அனுப்பினாலும் அல்லது புல்லின் மேலாக நடக்க வைத்தாலும் அவன் அதைக் குறித்து ஒன்றும் அறியாதவனாயிருக்கிறான். ஓ, நீங்கள் தேவனை அறிவதற்கு உங்களைத் தாழ்த்த வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணங்களை விட்டு விலகி உங்கள் இருதயத்தையும் ஜீவனையும் அவருக்குத் திறந்து கொடுக்கும் போது மாத்திரமே அவர் தன்னை வெளிப்படுத்திக் காண்பிப்பார். 56நல்லது, “நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வரக்கூடுமா?” என்று அவன் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. “அந்த பரிசுத்த உருளைகள் அல்லது என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மத்தியில் ஏதாவது நன்மை வரக்கூடுமா? அப்படி ஏதாவது ஒன்று நடக்கும் என்றால் அது என்னுடைய ஸ்தாபனத்தில் தான் நடக்கும், என்னுடைய ஸ்தாபனத்தில். பாருங்கள்? அங்கிருந்து தான் அது வரும். பாருங்கள்? அப்படிப்பட்ட கூட்டத்தார் மத்தியிலிருந்து நன்மையானது வரக்கூடுமா?” இப்பொழுது பிலிப்பு எந்த மனிதனும் கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த பதிலைக் கொடுத்தான் என்று நினைக்கிறேன். “வந்துபார்” என்றான். வீட்டில் உட்கார்ந்து கொண்டு குறை கூறாதேயுங்கள். நீங்களே வந்து, கண்டுகொள்ளுங்கள். வந்து பாருங்கள். உங்களுடைய வேதாகமத்தைக் கொண்டு வந்து அது சரியா என்று சோதித்துப் பாருங்கள். அதைத் தான் எல்லோரும் செய்ய வேண்டும் பாருங்கள்? “வந்து பார்”. 57அவர்கள் கலிலேயா கடற்கரையைச் சுற்றி வருகையில் என்ன பேசிக்கொண்டு போனார்கள் என்று பார்ப்போம். அவன் இப்படியாக, “அந்த பழைய காரியம் உனக்கு ஞாபகம்... நாம் இருவரும் ஒன்றாய் வேதத்தைக் குறித்து பேசியிருக்கிறோம். நாம் வேதத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் ஓர் நாளில் அவர் வருவார் என்று அறியும் போது நாம் உன்னதங்களில் உட்கார்ந்து இருக்கிறதைப் போன்று இருந்தோம். சரி நாத்தான்வேலே நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். மேசியா வரும் போது அவர் எப்படி இருப்பார்? அவர் தான் மேசியா என்று நாம் எப்படி அறிவோம்”? நாத்தான்வேல் ஒரு நல்ல வேதாகம மாணவனாய் இருக்கிறதினாலே, “ஏன், அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பார் என்றான்”. அவர் தீர்க்கதரிசியாய் இருப்பார் என்று வேதாகமம் உறுதியாகச் சொல்லுகிறது என்றான். நல்லது, அப்படியென்றால் நாம் அவரை அறிவோம்“. ரசீதில் கூட கையெழுத்துப் போடத் தெரியாத அளவிற்கு கல்வி அறிவு பெறாத அந்த வயதான அருமையான மீனவரிடத்தில் அன்று மீன் வாங்கினோமே ஞாபகம் இருக்கிறதா? என்றான். “ஆம், எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது யோனாவின் குமாரனாகிய சீமோன்”. அவனுடைய சகோதரன் அவர் இருந்த இடத்திற்கு அவனைக் கொண்டு சென்ற போது, அவர் நேராக அவனை நோக்கி “உன்னுடைய பெயர் சீமோன் மற்றும் நீ யோனாவின் குமாரன்” என்று சொன்னார். இன்னும் நாத்தான்வேலே நீ அங்கு சென்ற பிறகு அவர் உன் பெயர் நாத்தான்வேல் என்று சொல்வாரானால் அது என்னை ஆச்சரியப்படுத்தாது“. பாருங்கள்? 58“ஓ, அதை நான் பார்க்கட்டும். பார்ப்பதினால் விசுவாசிக்கலாம் என்று அறிவாய் அல்லவா என்றான்”. மிசௌரி மாகாணத்திலும் அப்படித்தான். ஆகவே அவர்கள் அவ்விதம் பிரயாணப்பட்டு அந்த வழியாய் வருகிறதை நாம் பார்க்கிறோம். நாத்தான்வேல் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வந்தவுடன் அவன் என்ன செய்தான்? இயேசு இருந்த இடத்திற்கு அவன் கொண்டு வரப்பட்டபோது என்ன நடந்தது? “இதோ கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். அது நிச்சயமாக அந்த மனிதனுடைய நிலையைத் தளரும்படி செய்தது. அதற்கு அவன், “ரபி” என்று அழைத்தான். அதற்கு போதகரே என்று அர்த்தம். எப்படி நீர் என்னை அறிவீர். என்னுடைய வாழ்கையில் உம்மைக் கண்டதே இல்லை. நான் இந்த மலையைச் சுற்றியுள்ள பதினைந்து மைல் தொலைவில் வாழ்ந்து வருகிறேன். மற்றும் நேற்று மதியம் வரைக்கும் உம்மைக் குறித்து நான் கேள்விப்பட்டதேயில்லை. இப்படியிருக்க நான் இங்கு வந்தபோது “நான் இஸ்ரவேலன்” என்று சொல்கின்றீர் என்றான். நீங்கள் சொல்லலாம் அவன் அந்த விதமாக உடுத்தி இருந்ததினால் அவர் சொன்னார் என்று, ஓ, அப்படி இல்லை ஏனென்றால் எல்லா கிழக்கத்தியரும் அப்படியாகவே உடையணிந்து தாடியை வைத்திருப்பார்கள். நீ கபடமற்ற உத்தம “இஸ்ரவேலன்” என்று சொன்னாரே, இப்பொழுது அதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அவன், “ரபி, நீர் எப்பொழுது என்னைக் கண்டீர்”. அதற்கு அவர் பிரதியுத்திரமாக “நேற்று உன்னை பிலிப்பு அழைக்கும் முன் நீ அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் போதே பார்த்தேன் என்றார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள்? அதற்கு அவன் என்ன சொன்னான்? ஒருவேளை அவனுடைய ஆசாரியன் அங்கே நின்றுக் கொண்டிருக்கக்கூடும். அங்கே அநேக குறை கூறுகிறவர்கள் இருந்திருக்கலாம். அவர்கள் அங்கேயிருந்தார்கள், ஆனால் அவனோ அவரிடத்தில் ஓடி, “ரபி, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். அவனுடைய பெயர் இன்றைக்கும் அழியாததாக இருக்கிறது. அது ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. 59அங்கே நின்று கொண்டிருந்த அநேகர் அதை விசுவாசிக்கவில்லை. நிச்சயமாக விசுவாசிக்கவில்லை. “இந்த மனிதன் குறிசொல்லுகிறவன் என்றும் இவன் பிசாசுகளுக்குத் தலைவன் (பெயல்செபூல்)” என்றும் சொன்னார்கள். அப்பொழுது இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பினார். ஏன்? அவர்கள் தங்களுடைய சபையாருக்கு ஏதாவது பதில் கொடுக்க வேண்டும். கிரியைகள் நடந்தாயிற்று அது அங்கே நிகழ்ந்தது. ஆகவே “இவன் பிசாசுகளுக்கு தலைவன் (பெயல்செபூல்), குறி சொல்லுகிறவன், மற்றவர்களின் உள்ளத்தை தொடர்பு கொள்ளுபவன் என்றும் அநேக வார்த்தைகளைச் சொன்னார்கள்”. இயேசு அதற்கு, “நீங்கள் மனுஷ குமாரனுக்கு விரோதமாய் பேசுவது மன்னிக்கப்படும்” ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு நாளில் வருவார் அப்பொழுது நீ அதே காரியத்தைச் செய்வாய் என்றால் அதாவது அதற்கு ஒருவார்த்தை விரோதமாகப் பேசுவாய் என்றால் “அது இம்மையிலும் அல்லது மறுமையிலும் உனக்கு மன்னிக்கப்படாது” என்றார். அது ஒரு போதும் மன்னிக்கப்பட மாட்டாது. நாம் சரியாக அந்த சந்ததியில் தான் இருக்கிறோம். இப்பொழுது அந்த முதலாம் சந்ததியினர் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டாயிற்று. இன்னும் அதைக் குறித்து அநேக காரியங்களைச் சொல்லலாம். ஆனால் நாம் ஜெப வரிசையை வைக்கப் போகிறதினாலே கடந்து போகலாம். அன்று அங்கே அந்த அசலான பாரம்பரிய யூதர்கள் அதை அடையாளங்கண்டு கொண்டார்கள். இன்றும் உண்மையான கிறிஸ்தவர்கள் தேவனால் அழைக்கப்பட்ட விசுவாசிகள் அதைச் சரியாக இனங்கண்டு கொள்வார்கள். 60பின்னர் ஒரு நாளில் அவர் எரிகோவிற்குப் போய்க் கொண்டிருக்கையில் சமாரியா வழியாய் போகவேண்டியது இருந்தது. ஏன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அவர்களும் மேசியாவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் புறஜாதியாராகிய நாம் அவரை எதிர் நோக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் நாம் ஒரு மேசியாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? அவர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தது போல நமக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளைப் பெற்றிருக்கிறோம். பாருங்கள்? நாம் இரண்டாயிரம் வருடங்களாக அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அவரைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுதோ அவர் இரண்டாவது முறை வரும்படிக்கு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது அவர் சமாரியாவுக்குச் செல்ல வேண்டியதாய் இருந்தது என்று பார்க்கிறோம். அது மலையின் மேல் இருந்தது. அவர் சமாரியா சென்றடைந்தபோது சரியாக மத்தியான வேளையாய் இருந்திருக்க வேண்டும். ஆகவே அவருடைய சீஷர்களைப் பட்டணத்திற்குள் சென்று சாப்பிடுவதற்காக ஏதாவது வாங்கி வரும்படி அனுப்பினார். அப்பொழுது அந்தப் பட்டணத்திலிருந்து ஒரு சிறிய பெண்மணி (வாலிப ஸ்திரீ) வந்தாள். இப்பொழுது நீங்கள் விரும்புவீர்களானால், எனக்கு நேரமிருந்தால் அவள் ஏன் பகலின் அந்த நேரத்தில் அங்கே வந்தாள் என்று என்னால் அதை விவரித்துச் சொல்லமுடியும். எல்லா ஒழுக்கமான பெண்களும் ஒன்றாக வரவேண்டும். ஒழுக்கமற்ற பெண்கள் ஒழுக்கமுள்ள பெண்களோடு ஒன்றாக இணைந்து இருக்கக் கூடாது. இந்த நாள் வரைக்கும் அவர்கள் ஒன்றாக பொது இடத்தில் ஒரே சமயத்தில் இருக்கக் கூடாது. இப்பொழுது அவள் ஒரு நடத்தை கெட்ட பெண் என்று முத்தரிக்கப்பட்டவள். நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அதாவது ஒரு விபச்சாரியைக் குறித்துப் பேசுகிறேன். 61இப்பொழுது அவள் பகல் பதினோறு மணியளவில் அங்கே தண்ணீர் எடுக்க வந்தாள் என்று காண்கிறோம். அவள் கவர்ச்சியான பெண்ணாக இருந்தாள் என்று நாம் சிந்திக்கலாம். அந்த தண்ணீர் ஜாடி அவளுடைய தோளின் மேல் இருந்தது. இவ்விதமாக வந்து கொண்டு... அவர்கள் ஒரு பானையை தலையிலேயும் இன்னொன்றை இடுப்பிலேயும் வைத்துக் கொண்டு பொதுவாக பெண்கள் பேசுகிற விதமாக பேசிக் கொண்டு ஒரு சொட்டு கூட கீழே சிந்தாதபடி நடந்து போகிறதை நான் கண்டிருக்கிறேன். எப்படி நிலை தடுமாறாமல் போகிறார்கள் எப்படி அதைச் செய்கிறார்கள் என்று நான் அறியேன். இங்கே அவள் நடந்து சென்று அந்த இரு கைப்பிடிகள் உள்ள ஜாடியோடு போகிறாள். அதன் பிறகு அவர்கள் கிணற்றண்டைக்குப் போவார்கள். அதிலே ராட்டினம் உள்ளது, மற்றும் அதைக் கீழே இறங்கச் செய்து மேலே இழுக்கும் போது தண்ணீரைக் கொண்டு வரும். மற்றும் அது யாக்கோபுவின் கிணறாக இருந்தது. அது பட்டணத்துக்கு வெளியே இருந்த பொதுக் கிணறாயிருந்தது. அங்குதான் யாக்கோபு கிணற்றைத் தோண்டி அவனுடைய மிருகங்களுக்குத் தண்ணீர் வார்த்தான். அவனும் கூட அதிலிருந்து தண்ணீரைப் பருகினான். 62ஆகவே இந்த ஸ்திரீ தண்ணீர் எடுக்கும்படியாக அங்கே வந்து தன்னுடைய ஜாடியை கீழே இறக்கி வைத்ததைக் காண்கிறோம். அவள் முந்தின இரவு நடந்தவைகளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டு அப்படியே தன்னுடைய பானையை எடுத்து அதினுடைய கைப்பிடியை அந்த ராட்டினத்தின் கொக்கிகளிலே மாட்டி தண்ணீர் எடுக்கும்படியாகக் கீழே விடத் துவங்கினாள் என்பதைக் காண்கிறோம். அப்பொழுது, “எனக்குத் தாகத்துக்குத் தா” என்று ஒரு மனிதன் சொல்கிறதைக் கேட்டாள். நீங்கள் எப்பொழுதாவது அங்கே இருந்திருப்பீர்கள் என்றால் இந்த இரவு இருக்கிறதைப் போன்று திராட்சைக் கொடிகள் பார்ப்பதற்கு அழகாய் படர்ந்து, அந்த கிணற்றிற்கு காட்சி அமைந்திருந்தது. அதைச் சுற்றிலும் கொடிகள் அந்த சுவற்றின் மேலாக வளர்ந்து இருக்கும். ஆகவே இந்த யூதன் அந்த சுவற்றின் மேலாக உட்கார்ந்து இருந்தார். அவள் அங்கே பார்த்தபோது ஒரு யூதன் சுவற்றின் மேலாக உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டாள். “யூதர்கள் சமாரியர் இடத்தில் கேட்கிறது வழக்கம் இல்லையே என்றும் நமக்குள் எந்த ஒரு பரிமாற்றமும் இல்லையே” என்றாள். வேறு விதமாக சொல்வோமானால் அங்கே பிரிவினை இருந்தது. “நமக்குள் எந்த ஒரு பரிமாற்றமும் இல்லாத பட்சத்தில், நீர் புருஷனாயிருக்க சமாரியப் பெண்ணாகிய என்னிடத்தில் தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கிறீர்?”. 63அவர் பார்ப்பதற்கு சாதாரண யூதனாய் இருந்தார். அந்த மனிதன் வித்தியாசமாக எதுவும் உடுத்தியிருக்கவில்லை. சாதாரண மனிதனாக இருந்தார். பரிசுத்த யோவான் ஆறாம் அதிகாரத்தில் இப்படியாகச் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது அவர் முப்பத்திரண்டு வயது உடையவராக மாத்திரம் இருந்தார். ஆனால் பார்ப்பதற்கு ஐம்பது வயது உடையவரைப் போல் காணப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் “உனக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லை, ஆனால் ஆபிரகாமைப் பார்த்தேன் என்று சொல்லுகிறாயே” என்றார்கள். “அவர் ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்றார்”. “... (ஒலி நாடாவில் இந்த இடம் வெற்றிடமாக உள்ளது). தண்ணீர் எடுக்கக்கூடாதே. கிணறு ஆழமாயிருக்கிறதே. தண்ணீர் மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, எப்படி தண்ணீர் மொண்டு எடுப்பீர்? என்றாள்”. 64அதற்கு அவர், “நான் கொடுக்கிற தண்ணீர் உன்னுடைய ஆத்துமாவுக்குக் கொடுக்கிற தண்ணீராய் இருக்கும்” என்றார். அப்படியாக சம்பாஷனை போய்க் கொண்டிருந்தது. அவர் அவளுடைய ஆவியைத் தொடர்பு கொண்டிருந்தார், இப்பொழுது நான் சொல்லுகிறதை நம்ப வேண்டும். பாருங்கள்? இப்பொழுது அவள் ஒரு ஸ்திரீ, தன்னந்தனியாய் சமாரியாவிலிருந்து வந்திருக்கிறாள். “எங்களுடைய பிதாக்கள் இந்த கிணற்றின் தண்ணீரைக் குடித்தார்கள், நீர் இதைக் காட்டிலும் மகத்தான தண்ணீரைக் கொண்டிருக்கிறீரோ? மற்றும் எங்கள் பிதாக்கள் இந்த மலையில் தான் தொழுது கொண்டார்கள். ஆனால் நீங்களோ எருசலேமில் தான் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னாள். அந்த சம்பாஷனண அப்படியாகப் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவளுக்கு இருந்த பிரச்சனை என்ன என்பதை அவர் அறிந்தார். எத்தனை பேருக்கு அவளுடைய தொல்லை இன்னதென்று தெரியும்? நிச்சயமாக, அவளுடைய பிரச்சனை என்னவாயிருந்தது என்று கண்டறிந்தார். அவர், “நீ போய் உன் புருஷனைக் கொண்டு வா” என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்று சொன்னாள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சமாரியர்களிடத்தில் தன்னை யார் என்று அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். யூதர்களிடத்திலும் அப்படித்தான் செய்தார். இப்பொழுது இந்த சமாரிய ஸ்திரீ என்ன சொல்லப் போகிறாள் என்று கவனியுங்கள். “போய் உன் புருஷனை அழைத்துக்கொண்டு இங்கே வா” என்று சொன்னார். அவள், “எனக்குப் புருஷன் இல்லையே” என்று ஏன் சொன்னாள். அதற்கு அவர், “எனக்குப் புருஷன் இல்லை என்று நீ உண்மையையே சொன்னாய். ஏனென்றால் உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது உன்னுடன் ஜீவித்துக் கொண்டு இருக்கிறவனோ உன்னுடைய புருஷன் அல்ல. ஆகவே நீ உண்மையைச் சொன்னாய் என்றார்”. 65இப்பொழுது அதற்கு அந்த சமாரிய ஸ்திரீஎன்ன பிரதியுத்தரம் கொடுத்தாள் என்று பாருங்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பாதி மக்களையும் இன்னும் சில நேரங்களில் ஊழியக்காரர்களையும் சேர்த்துச் சொல்லுகிறேன். இவர்களைக் காட்டிலும் அவள் தேவனைக் குறித்து அதிகமாய் அறிந்திருந்தாள். அது உண்மை. ஆம். அங்கே நின்று கொண்டிருக்கும் ஆசாரியர்களைப் பாருங்கள். அவருடைய கிரியையைப் பார்த்தபோது, “இந்த மனிதன் குறி சொல்லுகிறவன், பிசாசுகளுக்குத் தலைவன்”, என்று கூறி அவர் எப்படியாய் ஏதாவது சூழ்ச்சியினால், தந்திரத்தினால் அதைச் செய்தார் என்று கண்டு பிடிக்க முயற்சித்தார்கள் பாருங்கள்? ஆனால் இந்த எளிய ஸ்திரீயோ, “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று அறிகிறேன்” என்றாள். கவனியுங்கள். “நாங்கள் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறதான மேசியா வரப்போகிறார் என்றும், அவர் வரும் போது இதைத் தான் செய்வார் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றாள். ஆமென். அதற்கு அவர், “உன்னோடு பேசுகிற நானே அவர் என்றார்”. அது போதுமானதாக இருந்தது. அவர் யார் என்று அறிந்து கொண்டாள். அவள் அதன் பிறகு என்ன செய்தாள் என்று கவனியுங்கள். நகரத்துக்குள் ஓடி அங்கேயிருந்த மனிதர்களிடத்தில், “வாருங்கள், நான் செய்த காரியத்தையெல்லாம் சொன்ன மனிதரைப் பாருங்கள். இது அந்த மேசியாவினுடைய அடையாளமாய் இருக்கிறது அல்லவா? காலம் துவங்கினதிலிருந்து நாம் எப்பொழுதாவது இப்படி ஒரு காரியத்தைப் பெற்றிருக்கிறோமா? இதோ இங்கே அந்த மெய்யான மேசியா இருக்கிறார்” என்றாள். 66அப்படியாகத்தான் தன்னை யூதர்களிடத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டார். சமாரியர்களிடத்திலும் அப்படியே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்பொழுது அது அவர்களுடைய காலத்தின் முடிவாக இருக்கிறது. இப்பொழுது அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் போதிக்கப்பட்டிருந்ததைப் போல புறஜாதியாரும் இரண்டாயிரம் வருடங்களாக போதகங்களைப் பெற்று இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றபடியே புறஜாதியாரும் பெறவில்லை என்றால், அவர் முகதாட்சன்யம் பார்க்கிறவராய் இருப்பார். ஆகவே இன்று நாம் அவரை எப்படி அறிந்து கொள்ளுவோம்? அவர் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து நம் மூலமாய்க் கிரியைசெய்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாக இயேசு கிறிஸ்து ஆவியின் ரூபத்தில் மனிதனுக்குள்ளாக இருந்து அதே காரியத்தைச் செய்து அந்த ஆவியை நபராக நிரூபிக்கிறார். யோவான் 14-ம் அதிகாரம் 12-ம் வசனத்திலே, “என்னை விசுவாசிக்கிறவன்” என்று சொன்னார். பாவனை செய்கிறவன் என்று அல்ல. “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான்” என்று சொன்னார். அது உண்மை அல்லவா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்) 67யோவன் 5:19-ல் பெதஸ்தா குளத்தை அவர் கடந்து போனார். நான் முன்பாகப் பார்த்தது பரிசுத்த யோவான்- 4ம் அதிகாரம். இப்பொழுது நான் 5-ம் அதிகாரத்தில் இருக்கிறேன். யோவான் 5-ம் அதிகாரத்தில் அவர் பெதஸ்தா குளத்தைக் கடந்து போனார். அங்கே திரளான ஜனக் கூட்டத்தார் படுத்திருந்தனர். திரளான ஜனம் என்று சொல்லும் போது இரண்டாயிரம் பேர் சேர்ந்தால் தான் ஒரு திரளான ஜனக் கூட்டம் என்று அர்த்தம். ஆகவே அங்கே அநேக திரளான ஜனங்கள் ஆட்டு வாசல் என அழைக்கப்படும் இடத்தின் அருகே அந்த ஆவிக்குரிய மருத்துவமனையிலே தண்ணீர் கலக்கப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். விசுவாசிகளுக்கு தெய்வீக சுகத்தைக் கொடுக்கும்படி எப்பொழுதுமே தேவன் ஒரு வழியை வைத்திருந்தார். பாருங்கள்? அங்கே தூதன் வந்து தண்ணீரைக் கலக்குவான். கலங்குகிற (troubled) தண்ணீர் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும். அதில் ஒரு பக்கத்தில் தண்ணீர் வேகமாய் பாய்ந்து போகும் இன்னொரு பக்கத்தில் காற்றானது தண்ணீர் மேலாக வீசி ஒரு சுழற்சியை உண்டாக்கும். அது தான் கலக்கப்பட்ட தண்ணீர். அங்கே அந்த தூதன் வந்து தண்ணீரைக் கலக்குவான். அதிலே விசுவாசத்துடன் முதலில் இறங்குகிறவன் அந்த தண்ணீரிலிருந்து வல்லமையைப் பெற்று குணப்படுவான். 68இயேசு அந்தக் கூட்டத்தினூடாய் கடந்து சென்று சரியாக முப்பத்தி எட்டு வருடங்களாக வியாதிப்பட்டுக் கொண்டிருந்தவன் இருக்கிற இடத்தை அறிந்து கடந்து சென்றார். அவன் புரோஸ்டேட் சுரப்பியினால் (prostate) அவதிப்பட்டு, அல்லது அது போன்று வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அது அவனைக் கொன்று போடத்தக்க வியாதி அல்ல. ஆனால் அதினுடைய முதிர்சிக்கு வந்தது. முப்பத்தி எட்டு ஆண்டுகளாய் அப்படி இருந்தான். அவர் அவனிடத்தில் சென்று “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்றார். அவர் ஏன் பார்வையற்றோர், சப்பாணிகள், நொண்டியை, மற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் அதைக் கேட்கவில்லை? அங்கே தலையில் நீர்கட்டு ஏற்பட்டு மண்டை அளவிற்கு அதிகமான வீக்கத்தையுடைய குழந்தையுடன் இருந்தார்கள். வேதமானது அவர்கள் குருடரும், சப்பானிகளும், முடங்கினவர்களுமாய் இருந்தார்கள் என்று கூறிற்று. ஆனால் இந்த மனிதனால் நடக்க முடிந்தது. அவன் இப்படியாக, “நான் இறங்கும் முன்னே வேறொருவர் இறங்கிவிடுவார்” என்றான். நினைவில் கொள்ளுங்கள், இந்த மனிதன் அங்கே இருக்கிறான் என்பதை அவர் அறிந்திருந்தார். புரிந்து கொள்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்). அவர் உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குப் போ என்று சொல்லும்போது அதிலே எந்தக் கேள்வியுமில்லை. அவன் நடந்து போனான். அவன் அப்படி செய்வான் என்று அவர் நன்கு அறிந்திருந்தார். 69அவன் ஓய்வுநாளில் தன் படுக்கையை எடுத்துக் கொண்டு போகிறதைக் கண்டு அவனை அழைத்தார்கள். இன்றிரவும் அதே காரியம் நடக்கும்.(ஒரு சகோதரன் உறக்க சத்தமாய் “சகோதரன் பிரான்ஹாம் எனக்கு பரிசுத்த ஆவிவேண்டும்” என்கிறார்). ஒரு மனிதன்... நீ பெற்றுக் கொள்வதற்கு கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. இந்த விதமாக புராஸ்டேட் (prostate) வியாதியிலிருந்து ஒரு மனிதன் குணப்பட்டான் என்று நிரூபிப்பானானால் நாளைய தினத்தில் என்ன நேரிடும் என்று நினைக்கிறீர்கள்? சிலர் அப்படியாய், “அங்கே மூலையில் ஒரு முடவன் இருக்கிறான். இங்கே ஒருவன் இருக்கிறான், அங்கே ஒருவன் இருக்கிறான் என்று சொல்லி, சென்று அவர்களைச் சுகப்படுத்தும் என்பார்கள்”. பாருங்கள், அதே பிசாசு தான். இயேசுவை அவர்கள் கேள்வி கேட்டார்கள். யோவான் 5:19-ல் அவர் சொன்னதைக் கவனியுங்கள். “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்”. மெய்யாகவே என்றால் முற்றிலுமாக என்று அர்த்தம். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதைத் தவிர வேறொன்றையும் தாமாகச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளை குமாரனும் அந்தப்படியே செய்வார் என்றார்”. பாருங்கள்? பிதாவானவர் அவருக்கு முதலாவது தரிசனத்தில் காட்டாத பட்சத்தில் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்“ அது அவரை தேவன் - தீர்க்கதரிசியாகச் செய்தது. 70இன்றைக்கும் அதே தேவன் - தீர்க்கதரிசியாக, அதே பரிசுத்த ஆவியானவராக அதே விதமாகத்தான் தம் ஜனத்தின் மத்தியில் வாசம் பண்ணுகிறார். அவரை நாம் ஞானஸ்நானம் மூலமாக ஏற்றுக் கொண்டோம். ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறதின் மூலம் அவரை ஏற்றுக் கொண்டோம். அவர் மற்ற பாஷையில் பேசுகிறதைப் பார்த்தோம். அதற்கு அவர் வியாக்கியானம் கொடுக்கிறதையும் பார்த்தோம். இந்த நாளுக்குரிய மகத்தான அடையாளங்கள் செய்யப்படுகிறதில் அவரை நாம் காண்கிறோம். ஆனால் நாம் வேறொரு காரியத்துக்கு கடந்துசெல்வோம். அநேக பாவனைக் காரியங்கள் நம்மிடம் இருந்தது. அநேக காரியங்களைப் பெற்றிருந்தாலும் அவைகள் வேதாகம சத்தியத்திற்குப் புறம்பே நம்மை எடுத்து விடமுடியாது. ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும், என்றறென்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்றும் இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். அவர் தேவனுடைய குமாரன். அவர் என்றென்றும் ஜீவிக்கிறவராய் இருக்கிறார். அவர், “இன்னும் கொஞ்சக் காலத்திற்கு இந்த உலகம்..., இந்த பிரபஞ்சம், இந்த உலக ஒழுங்கு, இந்த சாதாரண ஸ்தாபனகுழு என்னைக் காணாது”, ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான்... “நான்” என்பது தனிப்பட்ட பிரதிப் பெயர்ச் சொல். நான் உங்களோடும் உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவு மட்டும் முழுவதுமாய் இருப்பேன் என்றார். நான் நானே உங்களுக்குள் இருந்து நான் செய்த அதே கிரியைகளை முழுமையாய் கடைசி காலத்திலேயும் செய்வேன். அதே நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறவர். கர்த்தாவே இதை விசுவாசிக்க உதவி செய்யும். 71இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த இரவின் பொழுது அவர் நம் மத்தியில் தோன்றுவார் என்றால்... அதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது இப்பூமியில் இன்று எப்படி தெய்வீக இரட்சகர் என்று ஒருவரும் இல்லையோ அது போல் தெய்வீக சுகமளிக்கிறவர் என்று ஒருவரும் இல்லை. அவர் ஏற்கனவே என்ன வாக்குத்தத்தம் கொடுத்தாரோ அதை உறுதிப்படுத்தும் படியாகவே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கு இருக்கிறார். அவர் தன்னுடைய வார்த்தை ரூபகாரப்படும்படி இங்கு இருக்கிறார். அவர் முதன் முறையாக வந்த போது அவர் நடப்பித்த காரியங்களின் மூலமாகவே தான் மேசியா என்று நிரூபித்தார். அது அவரை மேசியா என்று நிரூபித்தது. இப்பொழுது அவர், “நோவாவின் நாட்களில் நடந்தது போல, லோத்தின் நாட்களில் நடந்தது போல” என்றார். நோவாவின் நாட்களில் தண்ணீர் வந்தது. லோத்தின் நாட்களில் அக்கினி வந்தது. நாம் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்? அக்கினிக்காக. அவர் தன்னை எப்படி நிரூபித்தார் என்று கவனியுங்கள். அவர் இறங்கி வந்தார். அங்கே சோதோமிலே வெதுவெதுப்பான சபை விசுவாசியாய், பாதி பின்மாற்றம் அடைந்தவனாய் லோத்து இருந்தான். மற்றும் பரத்தில் இருந்து மூன்று தூதர்கள் இறங்கி வந்தனர். அவர்கள் முதலாவது ஆபிரஹாமிடத்தில் வந்தார்கள். அவன் தானே சோதோமிலிருந்து வெளியே அழைக்கப்பட்ட குழுவுக்குப் பிரிதிநிதித்துவமாக இருந்தான். அவன் ஏற்கனவே வெளியே அழைக்கப்பட்டிருந்தவன். மற்றும் இரண்டு தூதர்கள் சோதோமுக்குச் சென்று பிரசங்கித்தார்கள். அவர்கள் எந்த வித அற்புதங்களையும் செய்யவில்லை. அது நவீன பில்லி கிரஹாமாக இருக்கிறது. ஆனால் அவனோ தன்னை தேவனுடைய ஊழியக்காரனாக அடையாளங்கண்டு கொண்டான். அதன் பிறகு லோத்து அந்த வெதுவெதுப்பான பட்டணத்தை விட்டு வெளியே வந்தபோது, அக்கினியானது உடனடியாக அந்த இடத்தை அழித்துப்போட்டது. ஆனால் கவனியுங்கள் ஆபிரகாமோடு தங்கின, “அந்த ஒருவர்” எதை மாதிரியாக்குகிறது என்று கவனியுங்கள். 72இப்பொழுது, ஆபிரஹாம் நூறு வயதும் சாராள் தொன்னூறு வயதுடையவளுமாக இருந்தார்கள். இருபத்தைந்து வருடங்களாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெறும் படிக்கு காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கேதான், அவரை விசுவாசித்து அவருடைய வாக்குத்தத்தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களிடத்திலே அவர் வருவார். கவனியுங்கள், இருவர் அங்கே போனார்கள். ஆபிரகாமோடு இருந்த அந்த ஒருவர் தன்னை யாரென்று அடையாளம் காணச் செய்தார். அவருடைய முதுகுப் பக்கம் அவர்களுடைய கூடாரம் அமைந்திருக்கும்படி அவர் அங்கே உட்கார்ந்தார். நினைவில் கொள்ளுங்கள். ஓரிரு நாட்களுக்கு முன்புவரை, ஆபிராம் ஆகவும், சாராள், சாராய் ஆகவும் இருந்தார்கள். இப்பொழுதோ அவன் ஆ-பி-ர-கா-ம், சா-ரா-ள். இப்பொழுது அவரை கவனியுங்கள். அவர் அவனைக் கூப்பிடும்போது (முன்பு இருந்த அவனுடைய பெயரில் இல்லை) இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயரில், “ஆபிரகாமே உன் மனைவி சாராள் எங்கே?” என்றார். சா-ரா-ள், இளவரசி. அதற்கு அவன், “அவள் உமக்குப் பின்பாக இருக்கும் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். இப்பொழுது அந்த கூடாரம் அவருடைய முதுகுக்குப் பின்புறம் இருந்தது. அவனிடத்தில் அவனுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தின் படியாக, “ஆபிரஹாமே, நான், நான் உன்னை சந்திக்கப் போகிறேன்” என்று சொன்னார். அவர் யார் என்று பார்த்தீர்களா? தொடர்ந்து, “உன் மனைவியாகிய சாராள் இந்த குழந்தையைப் பெறப் போகிறாள்” என்று சொன்னார். 73அப்பொழுது அவருக்கு பின்பக்கமிருந்த கூடாரத்தில் இருந்த சாராள்... சாராள் அவருக்கு பின்பாக இருந்த கூடாத்தில் இருந்தாள் என்று வேதம் குறிப்பிட்டிருக்கிறது. அவள் அதைக் கேட்டு தனக்குள்ளே நகைத்தாள். அதற்கு அந்த தூதனானவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். பாருங்கள்? “ஏன் சாராள் நகைத்தாள்?” அவருக்குப் பின்பாக இருந்த கூடாரத்தில் என்ன செய்தாள் என்பதை அவர் அறிந்திருந்தார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுகிறீர்களா? பிறகு ஆபிரகாம் அவரை வழியனுப்பின போது அவர் தன்னுடைய வழியிலே கடந்து சென்றார். ஆபிரஹாமோ, நான் தேவனிடம் அதாவது ஏலோஹிமிடம் பேசினேன் என்றான். என்ன? ஏலோஹிம் என்றால், “எல்லாவற்றிலும் தன்னில் தானே போதுமானவராய் இருக்கிறவர்” என்று அர்த்தம். அது எதற்கு அடையாளமாய் இருக்கிறது? இயேசு என்ன சொன்னார்? லோத்துவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும் என்றார். அது அதுதான்... யாரோ ஒருவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அது தேவனென்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? என்றார். அவர் தேவன் என்று வேதம் கூறுகிறது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்றேன். அது தேவன் அவரே கூறியிருக்கிறார். அது எதற்கு அடையாளமாய் இருக்கிறது? தேவன் இந்த கடைசி நாட்களில் உலகம் அழிவதற்கு முன்பாக தன்னுடைய வெளியே அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு; அதாவது அவருடைய மக்களுக்கு மனித மாம்சத்திலே தேவனாய்த் தன்னை அடையாளப் படுத்துகிறார். இதோ அவர் இங்கே இருக்கிறார், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். இப்பொழுது அவர் உன்னை சுகப்படுத்துவாரா, மாட்டாரா என்பது கேள்வி இல்லை, ஆனால் அவர் ஜீவிக்கிறாரா இல்லையா, என்பது தான் கேள்வி. அவர் ஜீவிக்கிறார் என்றால் அவர் தன்னுடைய வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்வார். அப்படி இல்லையென்றால் எங்கிருந்தோ படித்த புராணக் கதையே தவிர வேறொன்றாகவும் இருக்காது. அது அவ்வளவு தான். ஆனால் அவர் இன்றிரவு நம் மத்தியில் ஜீவிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) 74என்னிடத்தில் கடிகாரம் இல்லை. என்னால் நேரத்தை... என்னுடைய கைக் கடிகாரம் உடைந்து போனது. நேரம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது நேரம் என்னவென்று யாராவது சொல்லுங்கள். (யாரோ ஒருவர் பத்தாக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது என்றார்) பத்தாக பதினைந்து நிமிடம் சரியாக நான் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் கால தாமதமாகிவிட்டேன். அப்படிச் செய்யும்படி நான் எண்ணவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். ஒரு கனம் நம்முடைய தலைகளை நாம் வணங்குவோம். உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். தொடர்ந்து இந்த வேத வாக்கியங்களைக் குறித்து அநேக வாரங்கள் இதே பொருளில் நாம் தரித்து இருக்கக்கூடும் .இது இயேசு இங்கிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்”, மற்றும் “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்”. இப்பொழுது அவர் கலிலேயாவில் நடந்தபோது என்ன செய்தாரோ சரியாக அதே காரியத்தை இன்றிரவு நம் மத்தியில் அவர் அசைவாடிச் செய்கிறதை நீங்கள் பார்க்கும் பட்சத்தில், அவரை விசுவாசிப்பீர்களா? “அவர் சரியாக அன்று செய்த அதே காரியத்தை இப்பொழுதும் அவர் செய்கிறதைக் காணும் பட்சத்தில் நான் அவரை விசுவாசிப்பேன்” என்று சொல்லுகிறவர்கள் முடிந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். 75எங்கள் பரலோகப் பிதாவே இவர்கள் ஒரு அருமையான மக்கள் கூட்டம். இவர்கள் மிகவும் பிரதியுத்தரம் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஊழியக்காரர்களாகிய நாங்கள் மக்கள் சுவிசேஷத்திற்கு பிரதியுத்தரம் கொடுக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமடைகிறோம். இது பலமாய் வீசுகிற காற்றின் சத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது என்று காட்டுகிறது. இந்த மகத்தான எழுப்புதலை நாங்கள் காணும்படி இங்கே டூசானில் நாங்கள் ஜெபித்த காரியம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். வேதத்தின் உண்மையான சாட்சிகளாக, உம்முடைய ஊழியக்காரர்களாக எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்படியாக நாங்கள் இங்கே இருக்கிறோம். மற்றும் “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினது” என்று நாங்கள் அறிவோம். மற்றும் இந்த வேதாகமம் தேவனுடைய சிந்தையை அவருடைய மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது என்று அறிந்திருக்கிறோம். மற்றும் “வார்த்தை” சிந்தையின் வெளிப்பாடாய் இருக்கிறது. ஆண்டவரே, இயேசு ஜீவிக்கிறார் என்று நாங்கள் காணும்படியாக இதோ என்னுடைய இருதயத்தின் தியானமாகிய “நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்” என்ற வார்த்தையை பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப்படுத்திக் காட்டி, எங்கள் மத்தியில் ஜீவிக்கின்ற தேவ வாக்காகும்படி செய்வீராக. 76அப்படி செய்வதினாலே ஆண்டவரே இங்கு கூடியிருக்கிறதான மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இன்னும் இரட்சிக்கப்படாதவர்கள் அந்த அருமையான இரட்சகரை விரும்புவார்களாக. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக நீர் கொடுத்த வாக்குத்தத்தம் அந்த நேரத்தில் எப்படி ஜீவனோடு இருந்ததோ அதே போல் இன்றிரவும் ஜீவனோடு இருக்கிறதை அறிந்து கொள்வார்களாக. வியாதியஸ்தர்கள் சுகப்படுவார்களாக, பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. மற்றும் நாங்கள் ஜெபிக்கிறதான எழுப்புதல் வழியில் வருகிறதை உணருகிறோம். கர்த்தாவே, ஒரு மனிதனால் சொல்லக் கூடிய அளவிற்கு நீர் என்ன சொன்னீரோ அதையே முடிந்த மட்டும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது, அன்பான இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளும்படியாக உம்முடைய பிரசன்னத்தை இன்றிரவு வெளிப்படுத்தும்படி விரும்புகிறோம். தேவனே இதோ நாங்கள் தெருவிலே நடந்து போகும் போது இது எங்களுடைய இருதயத்தை சிலிர்க்க வைப்பதாக. அது அடுத்த முறை நாங்கள் எதையாவது செய்யும் போது அல்லது தவறாய் சிந்திக்கும் போது நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீர் என்று அது எங்களுக்கு உணர்த்துவதாக, நீர் இங்கு இருக்கிறீர் என்பதை அறிகிறோம். ஆண்டவரே, நீர் இல்லாமல் இது நடப்பது கூடாத காரியம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே இன்றிரவு இதை எங்களுக்கு அருளும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஆமென். 77இப்பொழுது, நாங்கள் தினமும் ஜெப அட்டைகளைக் கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. நமக்குச் சற்று காலதாமதமாகிவிட்டது. நாம் பத்து மணிக்கு இதை முடித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இப்பொழுது சில ஜெப அட்டைகளை அழைத்து நாம் சில வியாதிஸ்தர்களுக்காக ஜெபிப்போம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம் மத்தியில் ஏதாவது ஒரு காரியம் நிகழும்படி அருள் செய்யக் கூடும். ஒவ்வொரு நபரும் முற்றிலும் அமைதியாக உட்கார்ந்திருக்கும்படி விரும்புகிறேன். உங்களால் முடிந்த வரை அமைதியைக் காத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இடத்திலே தரித்திருங்கள். மற்றும் தொடர்ந்து நினைவு கூர்ந்து ஜெபியுங்கள். இப்பொழுது நாம் எங்கிருந்தாவது ஆரம்பிப்போம். பில்லி இங்கே இருக்கிறானா? முடிந்தால் நான் அவனைக் காணட்டும் .அவன் ஜெப அட்டைகளை கொடுத்திருப்பான். அவன் எந்த எண்ணில் இருந்து கொடுத்தான் என்று எனக்குத் தெரியாது. ஓ, அவன் பின்பக்கதில் அந்த நிழலில் இருக்கிறான். என்ன? அ, ஒன்றிலிருந்து நூறு வரைக்கும் (A-1 to A-100). சரி எட்டு அல்லது பத்து பேர் எழும்பலாம். “அ எண் ஒன்று” என்ற ஜெப அட்டை யாரிடம் உள்ளது. அ எண் ஒன்று? உங்களால் எழும்ப முடியவில்லை என்றால் நாங்கள் தூக்கிக்கொண்டு வருவோம். அ எண் ஒன்று? நாம் பார்க்கலாம் எந்த வழியாக அவர்கள் வரவேண்டும்? இந்த வழியாக வந்தால் நலமாய் இருக்கும் என்று நம்புகிறேன். அல்லது இந்த வழியில்? சரி, “அ” எண் ஒன்று, சீமாட்டியே அங்கே போவீர்களா. 78அ எண் இரண்டு? எண் இரண்டை வைத்திருக்கிறவர் யார்? இங்கே ஸ்பேனிஷ் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிவேன். எண் இரண்டை பெற்றவர்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று காணும்படியாக உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? அ எண் இரண்டு பின் பக்கம் ஒரு கனவான் இருக்கிறார். ஐயா, இங்கே வருவீரா. எண் மூன்று, எண் மூன்று, ஜெப அட்டை மூன்றை வைத்திருக்கிறவர்கள் உங்களுடைய கையை உயர்த்துவீரா? ஒரு சீமாட்டி. மூன்றை வைத்திருப்பீர்கள் என்றால் சீமாட்டியே உம்மால் முடிந்தால் இங்கே முன்பாக வாருங்கள். மூன்று. ஜெப அட்டை எண் நான்கை வைத்திருக்கிறவர் யார்? அங்கே உங்களுடைய கரத்தைஉயர்த்துவீரா? இதோ இங்கேயே ஒருகனவான். நல்லது. எண் ஐந்து? சரி இங்கே வாருங்கள். ஆறு, ஜெப அட்டை எண் ஆறை வைத்திருக்கிறவர் யார்? எண் ஆறு. யாராவது இதை ஸ்பேனிஷ்ல் சொல்லுங்கள். என்ன? (அநேகர் “சேயிஸ்” என்கின்றனர்) சேயிஸ்? (மறுபடியும் அநேகர் சேயிஸ் என்கின்றனர்) “சேயிஸ்”. ஜெப அட்டை எண் ஆறு பாருங்கள்? உங்களுடைய பக்கத்தில் இருக்கிறவர்களுடைய ஜெப அட்டையைப் பாருங்கள், ஒரு வேளை அவர்கள் காது கேளாதவர்களாய் இருக்கக்கூடும். அப்படியென்றால் அவர்கள் அவர்களுடைய தருணத்தை தவறவிடுவார்கள். நாம் எல்லாருமே ஜெபிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆகவே, யாராவது எண் ஆறை வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள். ஓ, நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள். நல்லது ஆறு ஒருவேளை... ஒருவேளை நான் நீண்ட நேரம் பிரசங்கித்ததினாலே அல்லது பிரசங்கிக்கவில்லை பேசினதினாலே சிலர் அப்படியாய் சில நிமிடங்களுக்கு முன்பாக கடந்து போய் இருக்கலாம். அவர்கள் மிகவும் களைப்படைந்து சென்றிருக்கலாம். ஆறு, ஏழு, எண் ஏழு உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? எண் ஏழு, எண் எட்டு, ஒன்பது. சரி நல்லது. எண் ஒன்பது, ஜெப அட்டை எண் ஒன்பது? அது அந்த சிறுவனுடையதா? சிறுவனே எண் ஒன்பதை வைத்திருக்கிறாயா? எட்டு சரி, அது நல்லது. எண் எட்டு, எண் ஒன்பது? 79கவனியுங்கள், ஏதாவது ஜெப அட்டை உங்களுக்குக் கிடைக்கும் என்றால் அதை அப்படியே எடுத்து ஜெப வரிசைக்கு வராதீர்கள். ஏனென்றால் நீங்கள் இன்னொருவருடைய இடத்தை கொள்ளையிடுகிறீர்கள். பாருங்கள், நீங்கள் வந்து உங்களுடைய சொந்த ஜெப அட்டையை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். பாருங்கள். யாரோ ஒருவர் வந்து அட்டையை பெற்றுக் கொண்டு இன்னொருவருக்கு கொடுத்து விடுவார்கள், அவர்கள் எழுந்து வேறொருவருக்கு கொடுத்து கடந்து செல்லுவீர்களானால், பாருங்கள், யாரோ ஒருவர் அந்த இடத்தை பெற தவற விடும்படி செய்கிறீர்கள். அது சரியே. எண் ஆறு, ஒன்பது வெளியே போய்விட்டார்கள். இதை யாராவது சத்தமாய் ஸ்பேனிஷில் சொல்ல முடியுமா? (“நுவே” என்று ஒருவர் சொல்லுகிறார்) சரி. இது அப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதேயில்லை. சரி நல்லது அந்த ஜெப அட்டை இங்கே இருந்தால்... நல்லது அந்த சீமாட்டி எண் ஆறு அல்லது ஒன்பது வைத்திருக்கிறாரா? எண் ஆறை வைத்திருக்கிறீர்களா? ஓ, சரி, நல்லது. எண் ஒன்பது, ஜெப அட்டை எண் ஒன்பது யாரிடத்தில் உள்ளது? (யாரோ ஒருவர் அவர்கள் போய்விட்டார்கள் என்கிறார்) அவர்கள் கடந்து போய்விட்டார்கள். பரவாயில்லை. நல்லது. 80சரி, நாம் இங்கேயிருந்து ஆரம்பிப்போம். ஜெப வரிசையை ஆரம்பிப்போம். இப்பொழுது நாம் துரிதமாய் விரைந்து செய்வோம். நீங்கள் பதற்றப்பட வேண்டாம். நாம் இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்குள்ளாக கடந்து செல்லலாம். ஆனால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அவ்வளவுதான் சகோதரனே, அங்கே கொஞ்சம் இடம் இருந்தால் நலமாயிருக்கும் என்று நம்புகிறேன். உங்களால் அதை செய்ய முடியுமா? நன்றி. (ஒரு சகோதரன் “சகோதரன் பிரான்ஹாம்” நாம் பத்து மணிக்குள்ளாக காலி செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்) அந்த சகோதரன் வந்து நாம் பத்து மணிக்கு இடத்தைக் காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார். அது மிகவும் அருமையானது, சரி நாம் மக்களை களைப்பாக்க விரும்பவில்லை. இப்பொழுது இது தான் காரியம். எத்தனை பேர் வியாதிப்பட்டவர்களாய் இருந்து ஜெப அட்டைகள் இல்லாமல் இருக்கிறீர்கள்? ஜெப அட்டை இல்லாதவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஓ, எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நீங்கள் ஜெப அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விசுவாசம் வைத்திருக்க வேண்டும் பாருங்கள், ஜெப அட்டை என்பது உங்கள் கரத்தில் கொண்டிருப்பதாகும். அது எழுதப்பட்ட ஒரு எண் உடைய அட்டையாக இருக்கிறது. அவ்வளவுதான். அது வெறுமனே எண் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்களை உடையதாயிருக்கிறது. அது அவ்வளவுதான். ஒவ்வொரு நாளும் நாங்கள் புதிய அட்டைகளைக் கொடுக்கிறோம். ஏனென்றால் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் நாங்கள் ஒரு எண்ணில் இருந்து துவங்கி அதன் பிறகு அடுத்த எண்ணிற்குச் செல்லுகிறோம். 81எத்தனைப் பேர் இதற்கு முன்பாக நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தைப் பார்க்கட்டும். ஓ, ஓ, என்னே‚ நான் புதிய கூட்டத்தார் மத்தியில் பேசுகிறேன் என்று நினைத்தேன். ஆகவே இப்படியாகப் பேசினேன். பாருங்கள்? (ஓ, இல்லை) இங்கு இருக்கிறவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்கனவே கூட்டங்களில் கலந்திருக்கிறீர்களா?. நல்லது, அப்படியென்றால் நாங்கள் எந்த விதமாகச் செய்கிறோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது, இங்கு எனக்குத் தெரியும் என்று சொல்லக்கூடிய நபர் யாரையும் என்னால் காண முடியவில்லை. உங்களில் சிலரை நான் அறிந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும் என்ற நபர் யாரையும் நான் காணவில்லை. தெரியும் என்ற ஒரு நபரைக் கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய மனைவி இங்கு ஏதோ ஒருஇடத்தில் இருக்கிறாள் என்று நான் அறிவேன். மற்றும் என்னுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் எங்கு இருக்கிறாள் என்று நான் அறியேன். ஆனால் அவள் இங்கே இருந்தாலும் கூட நான் அறியேன். இங்கு ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறாள். ஆனால் இங்கு... இந்தியானா சபையிலுள்ள எங்களுடைய தர்மகாத்தாக்களில் ஒருவரான சகோதரன் பிரைட் சாத்மன் சற்று நேரம் முன்பாக ஆமென் என்று சொல்லுவதைக் கேட்டேன். அவரை நான் அறிவேன். ஆனால் அவரைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று பரலோகத்திலிருக்கிற என் பிதா அறிவார். இங்கிருந்து அவரைக் காண்பது கடினமாய் இருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்று கூட நான் அறியேன். எனக்குத் தெரிந்தவர்கள் யாரையும் நான் காணவில்லை, ஒரு நபரும் இல்லை. ஆனால் ஜெப வரிசையில் இருக்கிற நீங்கள் என்னைத் தெரியாது என்று சொல்லுகிறவர்கள் அல்லது எனக்கு உங்களைத் தெரியாது என்று சொல்லுகிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இதை நீங்கள் அறியவேண்டும். சரி. எல்லோரையுமே. அவர்களை நான் அறியேன். அவர்களுக்கும் என்னைத் தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. எனக்கும் உங்களைத் தெரியாது. 82இப்பொழுது காரியம் என்னவென்றால் இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறாரா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) அதைத்தான் நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். பாருங்கள்? இப்பொழுது நாம் “ஆம் அவரை என் இருதயத்தில் உணருகிறேன்” என்று அநேக காரியங்களைச் சொல்லலாம். மக்களோ அதைக் குறித்துப் பல காரியங்களைச் சொல்லுவார்கள். அது மனோதத்துவம் என்பார்கள். இன்னும் அநேக காரியங்களைச் சொல்லுவார்கள். ஆனால் நாமோ, அவர் உண்மையில் ஜீவித்து, வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டபடியாக அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராய் இருக்கிறவராய்த் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுகிறாரா என்று பார்க்க விரும்புகிறோம். அதைத்தான் நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். இங்கே நான் என்னுடைய கரத்தில் தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய மகனைத்தவிர வேறு எந்த நபரையும் இப்பொழுது எனக்குத் தெரிந்தவராய் என்னால் பார்க்க முடியவில்லை. இங்கே சகோதரன் டோனி மற்றும் இந்த முழு சுவிசேஷ வியாபாரிகளின் ஐக்கியத்தின் தலைவர், இவர்கள் இருவரை மட்டும் தான் எனக்குத் தெரிந்தவர்களாய் என்னால் காண முடிகிறது. இங்கே கடைசியில் உட்கார்ந்திருக்கிற அந்த சிறிய பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அருமையானவர்கள் என்று நினைக்கிறேன். இங்கே இருக்கிறது அவர்களுடைய தாயார் என்று நம்புகிறேன். அது சரியா என்று எனக்குத் தெரியாது. அது சரியா? அல்லது தவறாய் சொல்லிவிட்டேனா? ஆம் அது தவறு. ஆகவே பாருங்கள் எனக்குத் தெரியாது. இசை வாசிக்கிற ஒரு சீமாட்டியைக் காண்கிறேன். பியானோவில் இருந்தது அவள் தானே? அவர்கள் பார்ப்பதற்கு அன்று ஓர் இரவு பியானோவை வாசித்த சீமாட்டியைப் போலவே முழுவதுமாக இருக்கிறார்கள். அது அவர்களுடைய தாயார் என்று எண்ணினேன். ஓ, அதோ அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆம் ஐயா, அதுசரி. இப்பொழுது நீங்கள் சொல்லலாம் அவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாய் இருக்கிறார்கள் என்று. அது சரி. ஆனால் இன்னும் அந்த சீமாட்டியைக் கூட எனக்குத் தெரியாது. 83ஆகையால் இங்கே நான் நிற்கிற என்னைச் சுற்றிலும் ஊழியக்காரர்கள் இருக்க பின்பாகவும், முன்பாகவும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதோ நாங்கள் இங்கே நிற்கிறோம். மற்றும் தீர்க்கதரிசன அடையாளமே இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் தரும் சான்று என்று நான் கோருகிறேன். வேதம் அப்படித்தான் சொல்லுகிறது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்னுமாக என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இப்பொழுது அது உண்மைதானா? அது சத்தியமாய் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாவியும் இந்த பலிபீடத்தண்டையில் வந்து, தான் பாவியென்று அறிந்து தன்னுடைய பாவத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றும் எல்லா வியாதியஸ்தர்களும் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என்னிடத்தில் எந்த வல்லமையும் இல்லை. நான் வெறும் ஒரு மனிதன் தான். என்னைப் போலவே தான் உங்களுடைய மேய்ப்பரும் இருக்கிறார். நாங்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாய் இருக்கிறோம், அவ்வளவுதான். ஆனால் நாங்கள், இப்பொழுது அவர்கள் எல்லாரும் பிரசங்கிமார்கள். நான் ஒரு பிரசங்கிகூட அல்ல. அதை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் ஊழியக்காரர்களும், போதகர்களும், இன்னுமாக அநேகமாயிருக்கிறார்கள். நான் பிரசங்கியுமில்லை, ஊழியக்காரனும் இல்லை, ஏனென்றால் என்னிடத்தில் எந்த கல்வியும் இல்லை. எந்த பள்ளிக்கும் போனதில்லை. என்னிடத்தில் எந்த பட்டமும் இல்லை. பி.ஏ.க்கள் அல்லது டி.டி.க்கள் எதுவுமே என்னிடத்தில் இல்லை. ஆனால் நான் தேவனை நேசிக்கிறதினாலே அவர் எனக்கு ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறார். நான் இந்த விதமாக அவருக்காக ஊழியம் செய்யும்படி என்னை அனுமதித்திருக்கிறார். 84இப்பொழுது இங்கே இருக்கிறார் என்பதற்கு; தன்னை இங்கே வெளிப்படுத்திக் காண்பிப்பாரானால் அதாவது நீங்கள் பெறும் இந்த பரிசுத்த ஆவியே அது அவர்தான் என்று நிரூபிக்கிறது. கிறிஸ்துவத்தை நிரூபிக்கக் கூடியது பெந்தெகொஸ்தே மாத்திரமே. விஞ்ஞானம் அதை நிரூபிக்க முடியாது. பெந்தெகொஸ்தே அனுபவம் இல்லாமல் நீங்கள் எதைக் கொண்டும் நிரூபிக்க முடியாது. பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள், மெத்தொடிஸ்டுகளும் இன்னும் யாராகிலும் அதை அறிந்து இருக்கிறீர்கள். தேவனை பெந்தெகொஸ்தே அனுபவம் மூலமாய் மட்டுமே நிரூபிக்க முடியும் என்று அறிந்திருக்கிறீர்கள். அதுவும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் நிரூபிக்கப்படும். ஸ்தாபனத்திற்கு அது நிரூபிக்கப்பட மாட்டாது. அது தனிப்பட்ட நபருக்குத் தான் நிரூபிக்கும். அதாவது “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”, என்று இயேசுவினிடத்தில் பேதுரு சொன்ன போது, அவர் அவனிடத்தில், “இரத்தமும் மாமிசமும் உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என்னுடைய பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார். இந்த கல்லின் மேலாக என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் இதை மேற்கொள்வதில்லை. அதை இடித்துப்போட முடியாது” என்று சொன்னதைப் போல் இருக்கும். இப்பொழுது இந்த சீமாட்டி எங்கே? 85இப்பொழுது இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்று நிரூபிப்பார் என்றால் எத்தனை பேர் இருக்கிற இடத்தில் உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளப்போகிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்தி, “அவர் அங்கு செய்த அதே காரியத்தை இங்கேயும் செய்வார் என்றால் அவர் ஜீவிக்கிறார் என்று நான் அறிவேன். சகோதரன் பிரான்ஹாம் நீர் பேச நான் கேட்டிருக்கிறேன். உம்மை அறிந்திருக்கிறேன். நீர் வெறும் ஒரு வழுக்கைத் தலை பிரசங்கி, உங்களிடத்தில் ஒன்றும் இல்லை என்று நான் அறிவேன். ஆனால் நீங்கள் சத்தியத்தைச் சொல்லியிருப்பீர்கள் என்றால் தேவன் அதற்கு நிச்சயமாக சாட்சி கொடுப்பார். அதை அவர் செய்யக் கடமைப்பட்டவராக இருக்கிறார்” என்று சொல்லுங்கள். இப்பொழுது நான் அவரைக் குறித்துப் பேசினேன். நான் சத்தியத்தையே உங்களிடத்தில் பேசினேன் என்று அவர் பேசட்டும். அது உண்மையாய் இல்லாத பட்சத்தில் அது சத்தியமில்லை. அது சத்தியமாய் இருக்கும் என்றால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 86இங்கே இருக்கிறதான இந்த சீமாட்டியை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை. சில நிமிடங்களுக்கு முன்பாக அவளுடைய கைகளை உயர்த்தி நாங்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு அந்நியராய் இருக்கிறோம் என்றாள். அவள் ஒரு வேளை என்னைக் குறித்து செய்தித் தாளிலோ, பத்திரிகைகளிலோ கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது கூட்டங்களிலே பார்த்திருக்கலாம். ஆனால் இந்த ஸ்திரீயைக் குறித்து முதலாவது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால் நான் என்னுடைய வாழ் நாளிலே அவளை சந்தித்ததேயில்லை என்பது தான். முழுவதுமாக எனக்கு புதியவராய் இங்கு நின்று கொண்டிருக்கிறாள். சொல்லப் போனால் சில நிமிடங்களுக்கு முன்பாக நான் பேசின காரியத்தைப் போல் இது இருக்கிறது. அதாவது பரிசுத்த யோவான் நான்காம் அதிகாரத்தில் முதன் முறையாக சந்தித்த மனிதனும், ஸ்திரீயையும் போல் இருக்கிறது. அது அந்த கிணற்றன்டையில் சந்தித்து பேசினதான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அந்த ஸ்திரீயும். வேதம் சொன்ன விதமாகவே அதே காட்சி இங்கு இருக்கிறது. இயேசு அவளை அறிந்திருக்கவில்லை. அவளும் ஒரு போதும் இயேசுவை அறிந்திருக்கவில்லை. அவளிடத்தில் குடிக்கிறதற்கு தண்ணீர் தா என்று கேட்டபோது அவரை அவள் கேள்வி கேட்டாள். பிறகு பிதாவானவர் அவளுக்குள்ளாக இருந்த பிரச்சனை என்னவென்று வெளிப்படுத்தினபோது உடனடியாக அவர் சாதாரன மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்று அடையாளங்கண்டு கொண்டாள். 87இப்பொழுது சீமாட்டியே உன்னை நான் அறியேன். உன்னைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன், அல்லது தேவனுடைய ஆவியைப் பிடிப்பதற்கு நீயே முதல் நபராய் இருக்கிறாய். இப்பொழுது நீ ஒரு விசுவாசி அதாவது கிறிஸ்தவ விசுவாசி என்று எண்ணுகிறேன். அரைகுறையாக அல்ல. ஏனென்றால் நான் உன் பக்கமாகத் திரும்பின போது உன்னுடைய ஆவிஅசைவு ஏற்படுத்தி வரவேற்பைக் கொடுத்தது. பாருங்கள். அவள் ஒரு கிறிஸ்தவள் என்று எனக்குத் தெரியும். பாருங்கள், ஒருவேளை அவள் மாயமாலக் காரியாகவோ வேறு வகையானவளாகவோ, அல்லது வஞ்சிக்கிறவளாகவோ இருந்து இங்கு நின்று கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு எப்படித் தெரியும் என்னுடைய வாழ் நாளிலே அவளைக் கண்டதேயில்லையே?. ஆனால் இப்பொழுது அவர் அன்று நிகழ்த்தினது போல மறுபடியும் இங்கே நிகழ்த்தி உன்னுடைய பிரச்சினை எங்கே இருக்கிறது என்றும், நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்றும்; ஒருவேளை சுகவீனமாய் இருக்கலாம், அல்லது பணப் பிரச்சனையாக இருக்கலாம், அல்லது வீட்டில் ஏதாவது தொல்லை இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அறிவார். அவர் அவருடைய பிரசன்னத்தினாலே (என்னுடைய சிந்தையையும் என் உதட்டையும் முழுவதுமாக எடுத்துக் கொண்டு) நீ எதற்காக இங்கு இருக்கிறாய் என்று எனக்கு வெளிப்படுத்துவார். அந்த வெளிப்படும் காரியம் உண்மையா அல்லது தவறா என்று உனக்குத் தெரியும். இல்லையா? அது உண்மையா அல்லது இல்லையாவென்று கண்டிப்பாக உனக்குத் தெரிந்திருக்கும். அப்போது எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள் (சபையார் “ஆமென்” என்கின்றனர்) 88இங்கே நான் என்னுடைய கைகளையும் உயர்த்தி இருக்கிறேன். எனக்கு தெரிந்த வரைக்கும் என் வாழ்நாளில் அவளை நான் கண்டதேயில்லை. என் வாழ் நாளில் ஒருபோதும் அவளைக் கண்டதேயில்லை. முற்றிலுமாக நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். இப்பொழுது கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீக்கு அவளுடைய தவறை வெளிப்படுத்தினது போல பரிசுத்த ஆவியானவர் இந்த ஸ்திரீக்கு அவளைக் குறித்தும், அவள் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல் இருந்ததும், அல்லது அவளுக்கிருக்கும் தொல்லையையும், அல்லது அவளுடைய இருதயத்தில் ஏதாவது வேண்டுமென்று அவள் விரும்புகிறதையும், அல்லது அது போன்று ஏதோ காரியங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றால் இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையினால் மாத்திரமே வெளிப்படுத்த முடியும். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). இப்பொழுது நீங்கள் பரிசேயர்கள் பட்சத்திலிருந்து, “இது பிசாசினால் உண்டானது” என்று சொல்லலாம் அல்லது விசுவாசிகள் பட்சத்திலிருந்து “இது தேவனால் உண்டானது” என்று சொல்லலாம். அது உங்களைச் சார்ந்தது. அது உங்களைப் பொறுத்ததாய் இருக்கிறது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே பேசுவாராக. 89இப்பொழுது இந்த ஒலிபெருக்கியை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், சில சமயங்களில் அபிஷேகம் வரும்போது நான் எவ்வளவு சத்தமாக பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் இதுவே சத்தியம் என்று அறிவித்திருக்கிறேன். இப்பொழுது தேவன் அதை சத்தியம் என்று இங்கே இந்த மக்கள் முன்பாக திரும்பவும் அறிவிக்கும்படி அவர் மீது சார்ந்திருக்கிறேன். அதை ஐந்து லட்சம் மக்களுக்கு முன்பாக செய்திருக்கிறேன். தேவனே அதைச் செய்தார். சொல்லப்போனால் இந்தியாவிலுள்ள பம்பாயில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு முன்பாக அவர் செய்தார். தென்ஆப்பிரிக்காவில் குதிரைப் பந்தயமிடும் மைதானத்தில் முப்பதாயிரம் பழங்குடியினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அங்கே தூக்குப் படுக்கையில் இருந்த அது போன்றவற்றில் கொண்டு வரப்பட்ட இருபத்தைந்தாயிரம் பேர் ஒரே சமயத்தில் தங்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்து போனார்கள். அவர்கள் விக்கிரகங்களை ஆராதிக்கிறவர்கள். அப்படி என்றால் தேவனை விசுவாசித்து அவ்விதமான காரியம் நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிற மறுபடியும் பிறந்த கூட்டத்தாருக்கு எவ்வளவாக நடக்கவேண்டும்? அவர்கள் பார்க்க விரும்பின வண்ணமாக இருபத்தைந்தாயிரம் அற்புதங்கள் அதே நேரத்தில் உடனடியாக நடந்தது. அப்படியென்றால் நமக்கு எப்படியாக நேரிடவேண்டும்? 90இப்பொழுது என் சகோதரியே, நாம் இருவரும் உலகத்தில் வெவ்வேறு பாகத்தில் பிறந்து ஒரு வேளை இங்குதான் நாம் முதல் முறையாக சந்திக்கிறோம். இப்பொழுது நாம் அனைவரும் என்ன சம்பவிக்கப் போகிறது என்று ஆவலாய் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிற வேளையில் அவர் எனக்கு வெளிப்படுத்தும் பொருட்டு நான் உன்னிடத்தில் பேச விரும்புகிறேன். பாருங்கள், இப்பொழுது அது அவராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு உன்னைத் தெரியாது. இதுவரை உன்னை ஒருபோதும் கண்டதில்லை. ஆனால் தேவன் உன்னை அறிவார். இப்பொழுது சபையார்... எப்போதாவது அந்த ஒளியைக் கண்ட சபையார் அதாவது கர்த்தருடைய தூதனின் படத்தை, எத்தனை பேர் அதைப் பார்த்திருக்கிறீர்கள்? அதைப் பார்த்திருக்கிறீர்களா? அது சரியே. இப்பொழுது இங்கே சரியாக எனக்கும் இந்த ஸ்திரீக்கும் நடுவிலே அது இருக்கிறது. உங்களால் அதைக் காண முடிகிறதா? அது அவளண்டை போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? இதோ இந்த ஸ்திரீயே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதோ இந்த ஸ்திரீக்கு அநேக சிக்கல்கள் இருக்கின்றது. அவளுக்குள்ளாக அநேக காரியம் சரியாய் இல்லை. அவளுக்கு சரி இல்லாத முக்கியமான காரியம் எதுவென்றால் அது அவளுடைய “பித்தப்பையின் நிலை”. அது உண்மை. அது உண்மையாய் இருந்தால் உன்னுடைய கரத்தை உயர்த்து. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார், அல்லவா?. சகோதரர்களே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சகோதரர்கள் “ஆமென்” என்கின்றனர்) 91“அவர் யூகித்து சொல்லுகிறார்” என்று யாரோ ஒருவர் சொல்லுகிறதை நான் உணருகிறேன். நான் யூகிக்கவில்லை. இப்பொழுது நீங்கள் உங்களை மறைத்துக் கொள்ள முடியாது. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் இங்கு இருக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை என்னால் அறிந்து கொள்ள முடியும். இயேசு அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டார். பாருங்கள். நான் இயேசுவல்ல, ஆனால் அவர் இங்கு நம்முடன் இருக்கிறார். பாருங்கள்? இங்கே உன்னை எனக்குத் தெரியாது. ஆனால் இயேசு நீயாரென்று சொல்வாரானால், பிறகு அது அந்தக் கேள்வியை எப்பொழுதும் உன்னை விட்டு நீக்கிவிடும் அல்லவா? திருமதி. ஹயின்மன் உங்கள் வழியிலே போங்கள். நீங்கள் சுகமானீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். ஆமென், ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). “அந்த ஸ்திரீயின் பெயரை?”, என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஏன், அவர் சீமோனிடத்தில் அவன் பெயர் என்னவென்றும் அவனுடைய தகப்பனார் பெயர் என்னவென்றும் சொல்லவில்லையா? அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). 92ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இதோ இங்கே இருக்கிறதான மனிதனை இதுவரை என் வாழ்கையில் கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று எண்ணுகிறேன். அது சரிதான். நாம் இதுவரை சந்தித்ததில்லை என்று மக்கள் அறிந்து கொள்ளும்படியாக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இதுவரை இந்த மனிதனைப் பார்த்ததேயில்லை. இவர் பார்ப்பதற்கு ஆரோக்கியமாயிருந்ததைப் போல் காணப்படுகிறார். நான் இந்த மனிதனைக் குறித்து ஒன்றும் அறியேன். இதுவரை அவரைப் பார்த்ததேயில்லை. ஆனால் தேவன் அவரைப் பற்றி முழுவதும் அறிந்திருக்கிறார். இப்பொழுது இவர் வியாதியில் இருந்து, என்னால் சுகப்படுத்த முடிந்து, நான் சுகப்படுத்தாமல் இருந்தால் நான் ஒரு மோசமான நபராய் இருப்பேனல்லவா? ஆனால் என்னால் சுகமளிக்க முடியாது ஏனென்றால் கிறிஸ்து ஏற்கனவே என்ன செய்து முடித்தாரோ அதை என்னால் திரும்பவும் செய்ய முடியாது. அவர் வியாதியாய் இருப்பார் என்றால், அவர் ஏற்கனவே சுகமடைந்துவிட்டார். இது எப்படி இருக்கிறது என்றால்... இப்பொழுது அவர் எனக்குத் தந்த இந்த சூட்டை இயேசு கிறிஸ்துவானவர் அணிந்துக் கொண்டு சரியாய் இங்கு நின்றாலும் கூட அவரால் சுகத்தைக் கொடுக்க முடியாது. அவர் ஏற்கனவே அதை செய்து முடித்துவிட்டேன் என்பார். அவர் நம்முடைய அக்கிரமங்களுக்காக காயப்பட்டார். அவருடைய தழும்புகளினாலே நாம் சுகமானோம். நீ இதை விசுவாசிக்கிறாயா என்று உன்னிடம் கேட்பார். ஆனால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று அடையாளங்கண்டு கொள்ள இப்பொழுது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். பாருங்கள்?அது சரி. 93இப்பொழுது இங்கு ஒரு மனிதர் இருக்கிறார். மற்றொருவர் ஒரு ஸ்திரீ. அவரை இதுவரை நான் பார்த்ததில்லை, சந்தித்ததில்லை. இந்த பூமியிலே ஒருவருக்கு ஒருவர் நாம் அந்நியர்கள். இப்பொழுது ஐயா, இந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர்... இப்பொழுது ஏதோ ஒன்று உங்களுக்குச் சம்பவித்தது. நீங்கள் அதை நன்கு அறிவீர்கள். இல்லையா? இப்பொழுது அந்த ஒளி இந்த மனிதர் மேலாக அமர்ந்திருக்கிறது. அவரைக் கேளும். நீங்கள் இதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நொடிக்கு முன்பாக, ஒரு மெய்யான இனிய மென்மையான உணர்வு உங்கள் மேலாக வந்தது. அது சரியா? அதுசரி என்றால் உம்முடைய கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள்? நான் சரியாக அதையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரி. இந்த மனிதனுடைய காதுகள் சரியாக கேட்கக் கூடாதபடிக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவருக்கு ஏதோ மோசமான ஒன்று நேரிட்டிருக்கிறது. ஏதோ கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை ஒன்று நடந்திருக்கிறது. அதற்காகத்தான் நான் ஜெபிக்கும்படியாக வந்திருக்கிறீர். அது சரியா இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. 94அது சரிதானா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). இப்பொழுது அவைகளெல்லாம் யூகித்துச் சொல்லுகிற காரியம் அல்ல. அவை உண்மையானவை. இங்கே பார்ப்போம். இப்பொழுது அவருடைய இருதயத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது தேவனா இல்லையாவென்று கண்டு நீங்கள் விசுவாசிக்க விரும்புகின்றீர்கள். நீங்கள் விரும்புகிற ஏதோ ஒன்று உங்களுடைய இருதயத்திற்குள்ளாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இருக்கிற இன்னொருவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது உங்கள் மனைவியே. அது சரி. அவளுக்கு இப்பொழுது அநேக சிக்கலினாலே மிகவும் வேதனையோடு துன்பப்படுகிறாள். அது சரியா? (அந்த சகோதரி ஆம் என்கிறாள்) அது சரி சகோதரி. நீயும் சுகமடைந்தாய். இருவரும் வீட்டிற்குப் போங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்தினார். களிகூர்ந்து கொண்டு உங்கள் வழியில் செல்லுங்கள். தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். சுகமடையுங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நம்பிக்கையோடிருங்கள், விசுவாசத்தைக் கொண்டிருங்கள், சந்தேகப்படாதிருங்கள். விசுவாசியுங்கள். அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு சகலமும் கை கூடும். பாருங்கள்? என்னால் சுகமளிக்க முடியாது. நான் சுகமளிக்கிறவன் அல்ல. ஆனால் இயேசுகிறிஸ்து உங்களோடு இப்பொழுது இங்கே இருக்கிறார் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 95இப்பொழுது உயர் இரத்த அழுத்தத்தினாலே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தியன் அல்லது மெக்ஸிகன் ஸ்திரீசரியாக இங்கே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாயா? உன்னை எனக்குத் தெரியாது. நான் இதுவரை உன்னைக் கண்டதுமில்லை. அது சரியா? ஆனால் நீ அங்கே உட்கார்ந்து கொண்டு அதை விசுவாசித்துக் கொண்டிருந்தாய். இல்லையா? நீ உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்றால் எழும்பி நில். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கினார். அங்கே என்ன நடந்தது? நீங்கள் சொல்லலாம். “சகோதரன் பிரான்ஹாமே அது வேதவாக்கியத்தின் படி இல்லையே”, என்று. ஆனால் அது சரியாகத்தான் இருக்கிறது. அவருடைய வஸ்திரத்தை ஒரு ஸ்திரீ தொட்டாள். அது சரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). இப்பொழுது, “நம்முடைய பெலவீனங்களைக் குறித்து தொடக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இப்பொழுதும் இருக்கிறார்” என்று வேதம் சொல்லுகிறதை எத்தனை ஊழியக்காரர்கள் மற்றும் எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அது சரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) நீங்கள் அவரைத் தொட்டீர்கள் என்று எப்படி அறிவீர்கள்? எப்படியென்றால் அவர் நேற்று கிரியை செய்த விதமாகவே இன்றும் கிரியை செய்ததினால் அவரைத் தொட்டோம் என்று அறிகிறோம். ஆமென். அது அவரை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் செய்கிறது. 96அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த ஏழையான ஸ்திரீயினுடைய விசுவாசத்தைப் பாருங்கள், ஒருமுறை ஒரு ஸ்திரீ கூட்டதினூடாகச் சென்று அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவள் தனக்குள்ளே. “அந்த மனிதன் உண்மையுள்ளவர், அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன் மற்றும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மாத்திரம் தொட்டால் போதும், நான் முழுவதும் குணமாவேன் என்று சொல்லிக் கொண்டாள்”, எத்தனை பேருக்கு அந்த சம்பவம் தெரியும்? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). நல்லது. அவர் அப்படியானால்... வேதத்தில், புதிய ஏற்பாட்டில் எபிரெயர் புத்தகத்தில், “நம்முடைய பெலவீனங்களைக் குறித்து தொடக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இப்பொழுதே இருக்கிறார்” என்று சொல்லுகிறது. அவரைத் தொட்டோம் என்று எப்படி அறிவோம்? ஏனென்றால் அவர் நேற்றைய தினத்தில் கிரியை செய்தது போல இன்றைக்கும் செய்கிறார். இப்பொழுது இந்த ஸ்திரீ என்னை ஒருபோதும் தொடவில்லை என்பதை அறிவீர்கள். அவள் என்னிடத்திலிருந்து முப்பது அடி தூரத்தில் இருக்கிறாள். ஆனால் நாம் தொடர்பு கொண்டிருக்கிற அந்த பிரதான ஆசாரியரை அவள் தொட்டாள். அதுவே காரியம். நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசத்தால் அவரை அவ்விதமாகத் தொடலாம். ஆமென். அவர் மாறாதவராயிருக்கிறார் என்று காணமுடிகிறதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). அந்த சிறிய ஸ்திரீயை கேட்டுப் பாருங்கள். அவளை இதுவரை நான் பார்த்ததுமில்லை. அவளை அறிந்ததுமில்லை. அவள் அங்கே அமர்ந்திருக்கிற ஒரு ஸ்திரீ அவ்வளவுதான். 97மன்னிக்கவும் (Excuse me) ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர், ஆனால் இயேசு கிறிஸ்து நம் இருவரையும் அறிந்திருக்கிறார். நீ செய்த காரியத்தையும் உன்னுடைய வாஞ்சையையும் அவர் எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அது உனக்கு வெளிப்படுத்துமா? நான் வெறும் உன்னுடைய சகோதரன். எனக்கு அதைக் குறித்துத் தெரியாது. அது ஏதாவது ஒரு வல்லமையிலிருந்து வர வேண்டும். அது இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து தான் வரும் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி ஆம் என்கிறாள்) நீ அதைச் செய்வாய். நீ அதைச் செய்வாய் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் நீ ஒரு கிறிஸ்தவள். நல்லது. நீ என்னை விசுவாசிக்கிறாய்... இப்பொழுது கூட்டத்திலுள்ளவர்கள் நீங்கள் எல்லோரும் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்). நாம் ஜீவிக்கின்ற இந்த மணி வேளையிலே இவைகள் எல்லாம் சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்) நினைவில் கொள்ளுங்கள், அது நடப்பதற்கு முன்னதாக இஸ்ரவேல் பெற்றிருந்த கடைசி அடையாளம் அதுதான். எது எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமோ அது எடுத்துக் கொள்ளப்பட்டது, விடப்பட வேண்டியது எதுவோ அது விடப்பட்டது. அங்கே அக்கினி விழுவதற்கு முன்பாக கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுதான். அது சரிதானே? அற்புதங்களும், அடையாளங்களும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், அந்நியபாஷையில் பேசுகிறதும் மற்றும் தெய்வீக சுகமளித்தலுமாகிய இவற்றை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் சோதோம் எரிவதற்கு முன்பாக கடைசியாக இருந்த அடையாளம் எது? இன்றிரவு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற இந்தக் காரியமே. தேவன் மனித மாம்சத்தில் தோன்றி இருதயத்தைப் பகுத்து அறிகிறதாகும். இயேசுகிறிஸ்து அதைச் சொன்னார். சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும் என்றார். 98நீங்கள், “நீர் அந்த ஸ்திரீயைப் பார்த்துக்கொண்டு அவளுடைய சிந்தையை அறிந்து கொண்டிருக்கிறீர்” என்று சொல்லலாம். அப்படியென்றால் என் முதுகு அவள் பக்கம் இருக்கும்படி நான் திரும்பி இருக்கட்டும். பாருங்கள்? நீங்கள் நினைக்கிறதை என்னால் அறிந்து கொள்ள முடியாது என்று எண்ணாதிருங்கள். ஏனென்றால் நான் அவ்விதமிருக்கிறேன். சரி. ஸ்திரீயே, நான் மற்றவர்களைப் பார்க்காதபடிக்கு நீ இப்பொழுது இங்கேவா. இப்பொழுது நாம் இருவரும் அந்நியர்கள். ஆனால் இயேசு கிறிஸ்து உன்னுடைய பிரச்சனை இன்னதென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்றால் அதை விசுவாசிப்பாயா? அப்படி விசுவாசிப்பாய் என்றால் உன் கரத்தை உயர்த்து. நீ மிகவும் பதட்டமாய் இருக்கிறதை நான் காண்கிறேன். அது சரிதான். குறிப்பாக மதியம் பிற்பகுதியில் நீ களைப்புற்று சோர்ந்து போகிற நேரத்திலே உனக்கு எல்லாமே விசித்திரமாக இருக்கிறது. நீ கீல் வாதத்தினாலும் (arthritis) துன்பப்படுகிறாய். (அந்த சகோதரி ஆம், சரிதான் என்கிறாள்) அது சரியென்றால் உன்னுடைய கரத்தை அசைப்பாயாக. (அது நிச்சயமாக சரிதான்) ஆம். நீ காலையில் படுக்கையில் இருந்து எழும்பும் போது மிகவும் மெதுவாக எழும்புகிறாய். அந்த நேரத்தில் அது உனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அது உண்மை. ஏதோ விசித்திரமான ஒரு மனிதனைக் காண்கிறேன். ஒரு வாலிபன் ஒருவன் தென்படுகிறான். அது உன்னுடைய மகன். அவனுடைய சரியில்லாத மனநிலையால் கஷ்டப்படுகிறான். அது குடும்பப் பிரச்சனையினாலே நிகழ்ந்தது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது உண்மை. அப்படி இல்லையா? நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி ஆம் என்கிறாள்) அப்படியென்றால் நீ விசுவாசிக்கிற விதமாய் கடந்து சென்று பெற்றுக்கொள். கர்த்தர் உங்களோடு இருப்பாராக. அவரை நம்பி விசுவாசியுங்கள். அப்போது எல்லாம் சரி ஆகிவிடும். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) நிச்சயமாகவே அவர் உங்களைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். 99எப்படி இருக்கிறீர்கள் ஐயா? (அந்த சகோதரன், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக”, என்கிறார்) நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று நினைக்கிறேன். (ஆம் ஐயா) ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் இருவரையும் அறிந்திருக்கிறார். (ஆம்) வாழ்கையில் முதன் முறையாக இரண்டு மனிதர்களாக நாம் இருவரும் சந்திக்கிறோம். ஆனால் இங்கே வேறு ஒருவர் இருக்கிறார். என் சரீரம் இப்பொழுது நிலையற்று ஆடிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய பெலவீனம் பாருங்கள்? ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாகப் பேசியபோது அது ஒரு போதும் என்னை பாதிக்கவில்லை. ஆனால் ஒரு தரிசனம் என்னை அப்படியாகச் செய்கிறது பாருங்கள்? எத்தனை பேர் அதைப் புரிந்து கொண்டதாக உணருகிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கிறார்கள்) தானியேல் ஒரு தரிசனத்தைப் பார்த்த போது அநேக நாட்கள் அவனுக்கு தலையிலே தொல்லை உண்டாயிற்று. இயேசுவானவர் முழு இரவும் பிரசங்கித்தார். இன்னும் தொடர்ந்து அநேக காரியங்களை செய்துக் கொண்டிருந்தார், ஆனால் அந்த ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டபோது, “என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்” என்றார். அது சரியா? (ஆமென்) அவருடைய பெலன். தேவனுடைய குமாரனுக்கே அப்படி செய்யும் என்றால் பாவியாகிய எனக்கு எப்படியிருக்கும். பாருங்கள்? அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் முழு கூட்டத்தாரும் எனக்கு மங்கலாகத் தெரிகிறீர்கள். பாருங்கள்? 100எனக்கு உன்னைத் தெரியாது. ஆனால் தேவன் உன்னை அறிவார். அவர் உன்னுடைய இருதயத்தில் உள்ளவைகளை எனக்கு வெளிப்படுத்துவாரானால், பாருங்கள்? இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்திருந்தார். அவர் உன்னுடைய இருதயத்தை அறிவார். அவர் உன்னுடைய வாஞ்சையை உனக்கு வெளிப்படுத்துவாரென்றால் நீ அதை பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரன் “ஆமென்” என்கிறார்) அங்கே இருக்கிறவர்களில் எத்தனை பேர் அதை பெற்றுக் கொள்வேன் என்று விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கிறார்கள்) நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் அது எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவரும். உனக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதென்று உன் கரத்தின் மேலாக உள்ள ஏதோ ஒன்று காட்டுகிறது. அது சரிதான். அது ஒரு காரணத்தினால் வந்திருக்கிறது. அது கண்டமாலை (Goiter) வளர்ச்சியினால் ஏற்பட்டது. அது சரிதான். நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரன் ஆம் ஐயா நான் விசுவாசிக்கிறேன் என்கிறார்) அவர் உம்மை அறிவார் என்று விசுவாசிக்கிறீரா? (ஆமென்) நீர் ஏதோ ஒரு நன்மையான காரியத்துக்காக குணமடைய விரும்புகிறீர். நீர் ஒரு மிஷனரியாக இருக்க விரும்புகிறீர். உம்முடைய பதவி மத்திய அமெரிக்காவில் இருக்கும். அது சரியா? திருவாளர். ஓகும் நீர் முழுவதுமாய் உம்முடைய முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீரா? விசுவாசியும். நீர் போய் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும். இயேசு கிறிஸ்து உம்மை சுகப்படுத்துவார். 101நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கிறார்கள்) எத்தனை பேர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்கள்? (ஆமென்) அவர் இங்கு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்) இப்பொழுது நான் உங்களுக்கு வேறொரு வசனத்தைக் கொடுக்கட்டும். “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று இயேசு சொன்னார். அதுசரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். எத்தனை பேர் அது உண்மை என்று அறிவீர்கள். (ஆமென்) அவர் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டபோது கடைசியாக அவருடைய உதட்டிலிருந்து புறப்பட்டவார்த்தை என்ன? “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமாவார்கள்” அது சரியா? (ஆமென்) நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்) எத்தனை விசுவாசிகள் இங்கே இருக்கிறீர்கள்? பார்ப்போம். அது சரி. இப்பொழுது நீங்கள் தேவனுடைய அற்புதத்தைக் காண விரும்பினால் இங்கே நீங்கள் காணும்படி வெளிப்பட்டது இயேசு கிறிஸ்து என்று நான் சொல்லுகிறதை விசுவாசியுங்கள். அப்படியென்றால் உங்களுடைய கைகளை இன்னொருவர் மேல் வையுங்கள். வெறுமனே கைகளை இன்னொருவர் மேல் வையுங்கள். அது என்ன கோளாறாக இருந்தாலும் பரவாயில்லை பக்கத்திலிருக்கிறவர் மேலாக உங்கள் கைகளை வையுங்கள். பாருங்கள் அது என்னுடையதல்ல, அது உங்களுடைது. “இந்த அடையாளங்கள் வில்லியம் பிரான்ஹாமை பின் தொடரும்” என்று சொல்லவில்லை. அது “அவரை விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும்”, “அப்பொழுது அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்” என்று சொல்லியிருக்கிறது. 102இப்பொழுது இயேசு நம் மத்தியில் ஜீவிக்கிறார் என்று திருப்தியடைந்தீர்களா? ஆமென் என்று சொல்லுங்கள்.(சபையார் “ஆமென்” என்கின்றனர்) ஏனென்றால் வாக்குக் கொடுத்தவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது நீங்கள் கைகளை மேலே வைத்தவர்களுக்காக ஜெபியுங்கள். பாருங்கள், நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். பாருங்கள் உங்களுக்காக ஜெபிக்காதீர்கள். மற்றவர்களுக்காக ஜெபியுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறார்கள். பாருங்கள், இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார் என்று அறிவீர்கள். அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் இங்கே ஜனங்களுக்கு முன்பாக நின்று கொண்டு அது உண்மை என்று உறுதிப்படுத்துவார் என்றால், நீங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள்.இப்பொழுது நான் உங்கள் யாவருக்காகவும் ஜெபிக்கப்போகிறேன். மற்றும் நீங்கள் ஒருவருக்கொருவர் ஜெபிக்கும் போது நம் முழு இருதயத்தோடும் விசுவாசிப்போமாக. 103எங்களுடைய பரலோகப் பிதாவே நீர் இன்றிரவு இங்கே இருப்பதினாலே எங்களுடைய உள்ளமெல்லாம் சிலிர்ப்படைகிறது. நீர் இங்கே இருக்கிறீர். இதோ உம்மை விசுவாசிக்கிற பிள்ளைகளுடைய இடத்திற்கு வரக்கூடாதபடிக்கு மிக தாழ்மையுள்ளதாகவோ, அல்லது மிக மகத்தானதாகவோ அல்லது தூரமாகவோ ஒரு இடமும் இல்லை. ஓ, பரலோகத்தின் மகத்தான தேவனே, நீர் இயேசு கிறிஸ்துவை பரிசுத்தஆவியின் ரூபத்திலே அனுப்பி அவர் இங்கிருக்கிறார் என்றும், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அடையாளங்கண்டு கொள்ளப்பட்டு அதை உம்முடைய பிள்ளைகள் விசுவாசிக்கிறார்கள். நான் அவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். நீர் உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தினீர். இப்பொழுது அநேக வியாதியஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உற்சாகப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷமாய் இருக்கிறார்கள். இதோ இந்த விசுவாசிகள், இந்த விசுவாசிக்கிற பிள்ளைகள் தங்களுடைய கைகளை வியாதிப்பட்ட சகோதரன் அல்லது சகோதரியின் மேலாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்துடன் அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். மற்றும் தேவனே நீர் வாக்கு கொடுத்திருக்கிறீர். அது உம்முடைய வார்த்தை. இப்பொழுது உம்முடைய ஊழியக்காரனாகிய நான் இந்த ஆராதனையை, விசுவாசிகளாகிய நாங்கள் பிசாசுக்கு சவாலிடும் நிலைக்கு கொண்டு வருகிறேன். அவன் எப்பொழுதுமே தான் செய்வது போலவே அவனால் முடிந்த மட்டும் எங்களை ஏமாற்றி வருகிறான். நாங்கள் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் இன்றிரவு எங்கள் மத்தியில் அவர் ஜீவிப்பவராய் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம். மற்றும் நாங்கள் எங்களுடைய கையை ஒருவர் மற்றவர் மேல் வைப்பதின் மூலம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோம். 104சாத்தானே, அவர்களை கட்டவிழ்த்து விடு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை விட்டு வெளியே வா. தேவனுடைய மகிமைக்காக இந்த ஜனக்கூட்டம் போவார்களாக. சாத்தானே அவர்களை கட்டவிழ்த்துவிடு. உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்து கட்டளையிடுகிறேன். அவர்களைப் போக விடு. இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே தேவனுடைய மகிமைக்காக அவர்களை விட்டு வெளியே வா. இங்கே இருக்கிற ஒவ்வொரு நபரும் இயேசுகிறிஸ்து தன்னுடைய வார்த்தையை காத்துக் கொண்டாரென்றும், நம் மத்தியில் வந்திருக்கிறார் என்றும், அவர் வாக்கு கொடுத்ததினாலே இங்கே இருக்கிறார் என்றும் உணருகிறீர்களா? அவர் இங்கே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். கலிலேயாவிலே நடந்த அதே கர்த்தராகிய இயேசு தான் இங்கு இருக்கிறார் என்றும் அவர் தன்னுடைய எல்லா வார்த்தைகளையும் காத்துக் கொள்ளுகிறார் என்றும் விசுவாசிக்கிறீர்களா? மற்றும் தேவனுடைய வார்த்தையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்படியாக யாரோ ஒருவர் அதாவது ஒரு விசுவாசி அவருடைய கைகளை உங்கள் மேலாக போட்டதினாலே நீங்கள் இப்பொழுது சுகமானீர்கள். சீற்றத்தை உண்டு பண்ணுகிற சாத்தானே நீ அவர்களை இன்னும் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. தேவன் அவருடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்பதில் உங்களுடைய விசுவாசம் குறையும் போது உங்களுடைய நம்பிக்கை தளர்ந்து போகிறது. எழும்பி நின்று உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். விசுவாசிக்கிற யாவரும் உங்கள் பாதங்களிலே எழுந்து நில்லுங்கள். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. உங்களுடைய கரங்களை உயர்த்தி அவரைத் துதியுங்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் சுகமானீர்கள். (சரி டோனி வாரும்).